ஐபோன் எக்ஸ் உட்பட ஆப்பிள் கருவிகளின் நம்பமுடியாத கேஷ்பேக்.!
இந்த எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தகுதியுள்ள சாதனங்கள் : ஆப்பிள், சாம்சங், கூகுள், ஒன்ப்ளஸ் மற்றும் சியோமி ஆகியவைகளாகும்.!
மராத்தி இந்துக்களின் பாரம்பரிய ஆண்டான 'குடி பட்வா'வையொட்டி, ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆப்பிள் பொருட்களின் மீதான சுவாரசியமான சலுகைகளை அறிவித்துள்ளனர். அதாவது, கேஷ்பேக், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பிற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பின்கீழ் கிடைக்கும் அதிகபட்ச கேஷ்பேக் ஆனது ரூ.10,000 ஆகும். அதே நேரத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி / நிதி நிறுவனங்களுடனான கூட்டுத்திட்டத்தின் கீழ் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் அணுக கிடைக்கும். சரி, இப்போது என்னென்ன கருவிகளுக்கு, என்னென்ன சலுகைகள் என்பதை விரிவாக காண்போம்.

கூடுதல் கேஷ்பேக்
கடந்த மார்ச் 12, 2018 முதல் சத்தமின்றி தொடங்கிய இந்த சலுகையானது ஜூன் 10, 2018 வரை நீள்கிறது. இந்த வாய்ப்பின்கீழ், ஒரு ஆப்பிள் ஐபோன் மீது ரூ.10,000/ -வரை கேஷ்பேக் கிடைக்கும். இஎம்ஐ பரிவர்த்தனைக்கான ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி நீங்களொரு ஐபோன் எக்ஸ்-ஐ வாங்குகிறீர்களானால், நீங்கள் ரூ.10,000/- என்கிற கூடுதல் கேஷ்பேக் வாய்ப்பையும் பெறலாம்.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்
கிடைக்கப்பெறும் கேஷ்பேக் ஆனது பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதியிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் 90 நாட்களுக்குள்ளாகவோ கிடைக்கும். சலுகைகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள கருவிகளை பொறுத்தமட்டில், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவற்றின் மீது, ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை வழியாக நிகழும் இஎம்ஐ பரிமாற்றத்திற்கு ரூ.8,000/- கேஷ்பேக் பெறலாம்.

ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ்
மறுகையில் உள்ள ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மீது ரூ.4,000/- கேஷ்பேக் பெறலாம். ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் மீது ரூ.3,000/- கேஷ்பேக் பெறலாம் மற்றும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவற்றிற்கு ரூ.2,000/- கேஷ்பேக் பெறலாம்.

ஆப்பிள் வாட்ச்
ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மீதும் ரூ.5,000/- என்கிற கேஷ்பேக் வாய்ப்பு (அனைத்து மாடல்களில்) சலுகைகள் திறந்துவிடப்பட்டுள்ன. ஆப்பிள் வாட்ச் (அனைத்து மாதிரிகள்) மீதும் அதே அளவிலான (ரூ.5000/-) கேஷ்பேக் கிடைக்கின்றது.

ஆப்பிள் மேக்புக்
மேக்புக் மாதிரிகளை பொறுத்தமட்டில், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.10,000/- அளவிலான கேஷ்பேக் பெறலாம். இது சார்ந்த கூடுதல் விவரங்களையும், விதிமுறைகளையும் அறிய indiaistore.com அணுகவும்.


ஐபோன் எக்ஸ்
ஐபோன் எக்ஸ் மீதான ஒரு சிறப்பு மேம்படுத்தல் திட்டத்தை பொறுத்தமட்டில், உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ20,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சலுகையானது, ஆப்பிள் பிரீமியம் விற்பனையாகங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இந்த எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தகுதியுள்ள சாதனங்கள் : ஆப்பிள், சாம்சங், கூகுள், ஒன்ப்ளஸ் மற்றும் சியோமி ஆகியவைகளாகும்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications