பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் புதிய தயாரிப்புகளின் விலை ஆகியவற்றை அறிவித்துள்ளது.

By Siva
|

சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டதன் மூலம் உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் வெளியாகும் தேதி மற்றும் புதிய தயாரிப்புகளின் விலை ஆகியவற்றை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை ரெடிங்டன் இந்தியா, ராஷி பெரிபெரல்ஸ் மற்றும் பிரிங்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஷோரூமில் விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளன. இந்த நிலையில் ஆன்லைனில் இந்த போனை பிளிப்கார்டில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

64GB மற்றும் 256 GB என்ற இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் இந்த போன்கள் கிடைக்கின்றது. ஐபோன் 8 மாடலின் விலை ரூ64000 மற்றும் ரூ.77000 விலையில் விற்பனை செய்யப்படும். அதேபோன் ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.73000 மற்றும் 86000 என்ற விலையிலும் ஐபோன் எக்ஸ் மாடலின் விலை ரூ.89000 மற்றும் 102,000 என்ற விலையிலும் கிடைக்கும்

செப்டம்பர் 2017 : ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!செப்டம்பர் 2017 : ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் மாடல்கள் இந்தியாவில் செப்டம்பர் 29 முதல் கிடைக்கும் என்றும் நவம்பர் 3 முதல் ஐபோன் எக்ஸ் மாடல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் 8 மற்றும் 8பிளஸ் மாடல்களுக்கு செப்டம்பர் 22 முதலும், ஐபோன் 8 டுயோ மற்றும் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு அக்டோபர் 27 முதலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்

இந்த நிலையில் ஐபோன் எக்ஸ் மாடலின் விலை இந்த அளவுக்கு உயர்வாக இருப்பது ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். இந்த மாடல் 10ஆம் ஆண்டு விழாவுக்கென்ற ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டது. ஸ்க்ரீனை சுற்றி பெஸல், எட்ஜ் டு எட்ஜ் OLEDஸ்க்ரீன் மற்றும் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் புதிய பயோமெட்ரிக் வசதி ஆகியவை இதில் உள்ளது

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் உள்பட அனைத்து புதிய தயாரிப்புகளும் ஐஓஎஸ்11-ல் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மிக அதிக சக்தி வாய்ந்த A11சிப்செட் அனைத்து மாடல்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எக்ஸ் மற்றும் 8 பிளஸ் மாடலில் டூயல் கேமிரா செட்டப் பின்பக்கம் உள்ளது. 8 பிளஸ் மாடலில் இந்த கேமிராக்கல் வெர்ட்டிக்கல் முறையில் இரண்டு கேமிராக்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple iPhone X, iPhone 8 and 8 Plus will be exclusive to the online retailer Flipkart in India, claims a new report.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X