ஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 43கோடி ரூபாய் மதிப்பிலான போலி ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை எஃப்.பி.ஜ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

10ஆயிரம் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள்

10ஆயிரம் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள்

சீனா நாட்டில் போலியாக தயாரிக்கப்பட்ட 10ஆயிரம் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் அமெரிக்காவிற்கு கடத்திவந்து ஒரு கும்பல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூவர் வெளயிடுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

மேலும் இதைப்போன்று கள்ள தயாரிப்பு மூலம் அமெரிக்காவிற்குள் வரும் போன்கள் உண்மையான ஆப்பிள் நிறுவன கடைகளில் சீரமைக்கப்பட்டு பின் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக ப்ரூவர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் சூடாகிறதா?- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்செல்போன் சூடாகிறதா?- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்

 தனித்துவமான ஐஎம்இஐ எண்கள்

தனித்துவமான ஐஎம்இஐ எண்கள்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொரு ஐபோன்களுக்கு என்றே தனித்துவமான ஐஎம்இஐ எண்கள் இருக்கும்,இது அமெரிக்கா மற்றும் கனடாவில் தரநிர்ணயம் செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பப்படும். எனவே அவ்வாறு
ஒரிஜினல் எண்களை கண்டறிந்து அதனை மாற்றி இவர்கள் கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளதாகவும் இதைபோன்ற விற்பனையால் பல அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார் ப்ரூவர்.

 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் போலி ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பின்பு இதன் மதிப்புரூ.43கோடி மதிப்புடயவை என தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 14மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

பின்பு இந்த போலி ஆப்பிள் பொருட்கள் தொடர்பாக இன்னும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். பயனர்களுக்கு
தெரியாமல் அவர்களது ஐஎம்இஐ எண்கள் போலியாக பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இந்தபோலி ஐபோன் விற்பனை குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple iPhone Smartphone Scam Liao brothers Arrested : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X