Home
News

அப்போ அது உண்மையா?- ரூ.30,000-க்கு குறைவாக ஐபோன் அறிமுகமா?- வெயிட் பண்ணி வாங்கலாமே!

ஆப்பிள் ஐபோன் எஸ்இ குறித்து வெளியான முழு தகவல்களை பார்க்கலாம். ஆப்பிள் அதன் வரவிருக்கும் ஐபோன் எஸ்இ (2022) சாதனத்தை கடந்தமுறை வெளியான ஐபோன் எஸ்இ உடன் ஒப்பிட்டு பார்க்கையில், கடந்த முறை வெளியான சாதனம் $399 தொடக்க விலையாக இருந்த காரணத்தால் இது (2022) மாடல் $300-க்கு குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தோராயமாக இந்திய வரிகளை தவிர்த்து பார்க்கையில் விலை ரூ.22,500 ஆக இருக்கும். வரி அனைத்தையும் உட்படுத்தி சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.29,990 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தகவல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ (2022) மாடல்

ஐபோன் எஸ்இ (2022) மாடல்

இந்தியாவை பொறுத்தவரையில் ஐபோன்களுக்கு என சிறந்த சலுகைகள் பண்டிகை காலங்களில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் நிறுவனம் குறைந்த விலை சாதனங்களை அறிமுகம் செய்வதே சமீபத்திய நோக்கமாக கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வரக்கூடிய ஐபோன் எஸ்இ (2022), ஐபோன் எஸ்இ 3, ஐபோன் எஸ்இ 5ஜி என இதில் ஏதாவது பெயரைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது $299 அல்லது $199 ஆக அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் மேலேக் குறிப்பிட்டது போல் இத்தனை விலைக் குறைப்புக்கு சாத்தியமில்லை என்றாலும் ஆப்பிள் அறிவிக்கும் விலைக் குறைப்பு சுவாரஸ்மானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 11:30 மணிக்கு ஆப்பிள் இணையதள யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி செயலி மூலம் நேரலைப்படுத்த இருக்கிறது. இந்நிகழ்வில் இந்த சாதனத்தின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

ஏ15 பயோனிக் எஸ்ஓசி பதிப்பு

ஏ15 பயோனிக் எஸ்ஓசி பதிப்பு

ஐபோன் 13 தொடரை இயக்கும் அதன் மிக சமீபத்திய ஏ15 பயோனிக் எஸ்ஓசி பதிப்பை ஆப்பிள் பயன்படுத்துவதால் அதன் விலை அதிகமாகவே வைத்திருப்பது என்பது நியாயமான ஒன்று. இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்ய இன்னும் சில மாதங்களே உள்ளது என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5ஜி இயக்கப்பட்ட ஐபோன் எஸ்இ ஆனது ரூ.25,000 மற்றும் ரூ.30,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அப்படி இது உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் 5ஜி நடுநிலை ஸ்மார்ட்போன்கள் இடையே கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் ஆப்பிள் சிறந்த தள்ளுபடிகளை வழங்கி ஆப்பிள் சாதனப் பிரிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 சீரிஸ் சாதனம்

ஐபோன் 12 சீரிஸ் சாதனம்

ஐபோன் 12 சீரிஸ் சாதனம் தற்போது இந்தியாவில் ஐபோன் 11 விலைக்கு இணையாக அறிமுகப்படுத்த உள்ளது. ஐபோன் 12 மினி 64 ஜிபி உள்சேமிப்பகத்துடன் பிளிப்கார்ட்டில் ரூ.50,099-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் அமேசானில் ஐபோன் 11 சாதனம் ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 11 சாதனத்துக்கு சமமாக ஐபோன் 12 சீரிஸ்

ஐபோன் 11 சாதனத்துக்கு சமமாக ஐபோன் 12 சீரிஸ்

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் சாதனம் தற்போது இந்தியாவில் ஐபோன் 11 சாதனத்தின் விலைக்கு சமமாக விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் தற்போது குறிப்பிட்ட விலையில் முந்தைய மாடலான ஐபோன் 11 சாதனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதே விலையில் கூடுதலாக ரூ.200 மட்டும் செலுத்தி ஐபோன் 12 சாதனத்தை வாங்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரண்டு சாதனங்களும் வெவ்வேறு இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஐபோன் 11 சாதனம் அமேசான் தளத்திலும், ஐபோன் 12 சாதனத்தை பிளிப்கார்ட் தளத்திலும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் பெரிய காட்சி சாதனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ஐபோன் 11 சிறந்த தேர்வாகும், அதேபோல் சமீபத்திய ஐபோன் சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் ஐபோன் 12 தொடரின் ஐபோன் 12 மினி சாதனத்தை வாங்கலாம்.

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை சிறிய வித்தியாசத்துடன் விற்கப்படுகிறது. ஐபோன் 12 மினி ஃபிளிப்கார்ட்டில் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.50,099 ஆக விற்கப்படுகிறது. அதேபோல் அமேசான் இந்தியாவில் ஐபோன் 11 சாதனம் ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான வித்தியம் ரூ.200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான சலுகையுடன் பிளிப்கார்டில் விற்பனை

அதிரடியான சலுகையுடன் பிளிப்கார்டில் விற்பனை

இங்கு, ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனம் அதிரடியான சலுகையுடன் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 மினி இப்போது அதிக தள்ளுபடி உடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ஐபோன் 12 வாங்க விரும்பாதவர்கள் ஐபோன் 12 மினி சாதனத்தைக் கூட இப்போது வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தின் 64ஜிபி மாறுபாடு இப்போது ரூ. 50,099 விலைக்குக் கிடைக்கிறது. அதே சமயம், 128ஜிபி மாறுபாடு மாடல் ரூ.55,099 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல், இதன் 256ஜிபி மெமரி வேரியன்ட் மாடல் ரூ.65,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும். ஐபோன் 12 சாதனமானது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.இரண்டு ஸ்மார்ட்போன்களும் டால்பி ஆதரவோடுவருகிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் அம்சத்துடன் இயக்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Apple Iphone SE Might be Launching at Under Rs.30,000: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X