ஆப்பிள் iPhone SE 3 தான் 'கடைசி'.. இதற்கு பின் 'இந்த' அம்சம் கிடைக்காது.. என்ன விஷயம் தெரியுமா?

|

ஆப்பிள் தனது ஐபோன் எஸ்இ 3 சாதனத்தை வரும் 2022 ஆம் ஆண்டில் எப்போதாவது அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் துல்லியத்திற்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. இந்த போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில் @Arsenal என்ற டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிளின் ஐபோனின் SE 3 ஆனது LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 பற்றி வெளியான சுவாரசிய தகவல்

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 பற்றி வெளியான சுவாரசிய தகவல்

இந்த குறிப்பிட்ட ஐபோன் எஸ்இ 3 சாதனம் எல்சிடி டிஸ்பிளே பேனலுடன் நிறுவனத்திலிருந்து வெளியாகும் ஒரே ஸ்மார்ட்போன் ஆகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். இத்துடன், வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார். இதன்படி, புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனம் 4.7' இன்ச் கொண்ட டிஸ்ப்ளே திரையுடன் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

கேமராவைப் பொறுத்தவரை, இந்த புதிய ஐபோன் எஸ்இ 3 கேஜெட் ஒற்றை பின்புற கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது iOS 15 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் GPS மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும். கடந்த சில ஆண்டுகளில், பல பிராண்டுகள் OLED டிஸ்பிளேவிற்கான தளத்தில் அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களும் அதன் விதிமுறைக்கு மாறிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..

பழைய ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் போல இது இருக்குமா?

பழைய ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் போல இது இருக்குமா?

சென்சார்கள் பற்றிப் பார்க்கையில், இந்த போனில் கைரேகை சென்சார் இருக்கலாம். சிறிய ஐபோனில் ஒரு எல்சிடி ஸ்கிரீன் அதை மிகவும் மலிவானதாக மாற்றும் என்று டிப்ஸ்டரால் மேலும் கூறப்படுகிறது. செய்திகளின்படி, அடுத்த தலைமுறை ஐபோன் எஸ்இ 3 பழைய ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் அடிப்படை சட்டத்தில் கட்டமைக்கப்பட உள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A15 பயோனிக் சிப்செட் உடன் சாதனத்திற்குச் சக்தி அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன ஸ்டோரேஜ் விருப்பத்துடன் புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனத்தை எதிர்பார்க்கலாம்?

என்ன ஸ்டோரேஜ் விருப்பத்துடன் புதிய ஐபோன் எஸ்இ 3 சாதனத்தை எதிர்பார்க்கலாம்?

இது ஐபோன் 8 மாடலில் கட்டப்பட்ட கடந்த தலைமுறை ஐபோன் எஸ்இ 2 போன்றது. வெளியான சமீபத்திய செய்தி கசிவு படி, இந்த ஸ்மார்ட்போன் பல சேமிப்பு வகைகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளியாகலாம். இந்த புதிய ஐபோன் சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

எப்போது இந்த புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனம் வெளியாகும்?

எப்போது இந்த புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனம் வெளியாகும்?

ஆனால், தற்போதைய நிலவரப்படி ​​அடுத்த ஆண்டு எந்த விலை பிரிவில் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்படும், எந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை. எங்களின் கணிப்புப் படி, ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 சாதனம் மலிவு விலை பிரிவில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக அற்புதமான ஐபோன்களில் இதுவும் ஒன்றா?

மிக அற்புதமான ஐபோன்களில் இதுவும் ஒன்றா?

இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கை, எனவே இது துல்லியமான தகவலாக இருக்காது. நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஐபோன் எஸ்இ 2020 இன் மிக அற்புதமான ஐபோன்களில் ஒன்றாகும், இது சிறந்த ஆப்பிள் வன்பொருள் மற்றும் மென்பொருளைச் சிறிய அளவிலும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலும் வழங்குகிறது.

இப்போது சிறந்த ஐபோன் மாடல்களை சிறந்த சலுகையுடன் வாங்க இதான் வழி

இப்போது சிறந்த ஐபோன் மாடல்களை சிறந்த சலுகையுடன் வாங்க இதான் வழி

இப்போதே, இந்த ஆண்டே புதிய ஐபோன் சாதனம் வாங்க வென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், உடனே அமேசான் தலத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையைப் பார்வையிடுங்கள். இந்த விற்பனையில் சிறந்த ஆப்பிள் ஐபோன் மாடல்கள் மீது நம்ப முடியாத ஏராளமான சலுகைகள் கிடைக்கிறது. எனவே நேரம் தாமதிக்காமல் உடனே உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் மாடலை சிறந்த சலுகையில் வாங்கி மகிழ்ந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPhone SE 3 Might Be The Last iPhone To Come With LCD Display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X