முழுசா ரூ.15,900 விலை குறைப்பு.. அடிச்சு புடிச்சு ஆர்டர் விழும் iPhone.. என்ன மாடல்? நம்பி வாங்கலாமா?
ஐபோன் (iPhone) வாங்க வேண்டுமென்கிற ஆசை உங்களிடம் இருந்தால்.. ஆனால் உங்களின் அதிகபட்ச பட்ஜெட்டே ரூ.35,000க்குள் தான் என்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் பிரபலமான பட்ஜெட் விலை ஐபோன் ஒன்றின் மீது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
நாம் இங்கே பேசுவது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 (Apple iPhone SE 3) மாடலை பற்றித்தான். பிளிப்கார்ட் வலைதளமானது ஐபோன் எஸ்இ 3 மீது 31% நேரடி தள்ளுப்படி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட வங்கி அட்டைகளில் கூடுதல் தள்ளுபடி (Extra Bank Offers) மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் (Exchange Offer) வழங்குகிறது.

ஐபோன் எஸ்இ 3 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? பட்ஜெட் வாசிகளை மனதிற்கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் எஸ்இ 3 மாடலானது ஐபோன் 11 (iPhone 11) அளவிற்கு மிகவும் பழைய மாடல் அல்ல, இது ஒன்றரை ஆண்டு பழைய மாடலே ஆகும். ஆப்பிளின் இந்த மூன்றாம் தலைமுறை (Third Generation) ஐபோன் எஸ்இ மாடல், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அறிமுகமானது.
அதுமட்டுமின்றி, இது மலிவான ஐபோனாக இருப்பதால், இதன் அம்சங்களும் சுமாராகவே இருக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது ஆப்பிளின் சக்திவாய்ந்த சிப்செட்களில் ஒன்றான ஏ15 பயோனிக் சிப் (A15 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது. இதே சிப்செட் தான் ஐபோன் 13 மாடலை இயக்குகிறது.
பேட்டரி ஆயுளை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 3 மாடலானது சிங்கிள் சார்ஜில் 15 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது. இது 4.7-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் இது ஒருவரின் பாக்கெட்டில் எளிதாகப் பொருத்தக்கூடிய மிகவும் சிறிய அளவிலான வடிவமைப்பை பெற்றுள்ளது.
சுவாரசியமாக ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 17 அப்டேட் (New iOS 17 Update) ஆனது ஐபோன் எஸ்இ 3 மாடலுக்கும் அணுக கிடைக்கும். அதாவது ஆப்பிளின் மிகவும் விலை உயர்ந்த மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸிற்கு கிடைக்கும் அதே ஓஎஸ் அப்டேட் இதற்கும் கிடைக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இது எச்டிஆர் 4 போன்ற அம்சங்களுடன் 12எம்பி ரியர் கேமராவையும், 7எம்பி செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது.
ஐபோன் எஸ்இ 3 மீதான தள்ளுப்படி: 64ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் எஸ்இ 3 மாடலின் அசல் விலை ரூ.49900 ஆகும். இருப்பினும், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இது 31 சதவீத தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.15901 என்கிற தள்ளுபடியை பெறுகிறது. இந்த ஆரம்ப தள்ளுபடிக்குப் பிறகு ஐபோன் எஸ்இ 3 மாடலை ரூ.33999க்கு வாங்க முடியும்
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மலிவான ஐபோனாக (Cheapest iPhone) இருக்கும் ஐபோன் எஸ்இ 3 ஆனது தற்போது இன்னும் மலிவானதாக மாறியுள்ளது. இதுமட்டுமல்ல ஐபோன் எஸ்இ 3 மாடலின் விலையை மேலும் குறைக்க எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கிறது.
ஐபோன் எஸ்இ 3 மீதான எக்ஸ் சேன்ஜ் சலுகை: எக்ஸ்சேஞ்ச் சலுகையின் ஒரு பகுதியாக, உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் பரிமாற்றம் செய்யும் போது உங்களுக்கு ரூ.30600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) கிடைக்கும். இருப்பினும் இந்த தள்ளுபடி உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் வேலை செய்யும் நிலையை பொறுத்து மாறுபாடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஐபோன் எஸ்இ 3 மீதான வங்கி சலுகைகள்: ஒன்கார்டு கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் நீங்கள் ரூ.1000 தள்ளுபடி பெறலாம். மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டில் 5 சதவீத கேஷ்பேக்கையும் பெறலாம். மேற்கண்ட எல்லா சலுகைகளுமே ஐபோன் எஸ்இ 3 மாடலின் மற்ற ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








