விலை இதுதான்., வாங்க ரெடியா?- அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022- ஏ15 பயோனிக் சிப், 5ஜி ஆதரவு!
ஐபோன் எஸ்இ 5ஜி இந்தியாவின் விலை ரூ.43,900 முதல் தொடங்குகிறது. இந்த ஐபோனானது மார்ச் 18 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்கூட்டிய ஆர்டர்கள் மார்ச் 11 முதல் நேரலையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் எஸ்இ அறிமுகம்
சமீபகாலமாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெரிதளவு எதிர்பார்க்கப்பட்ட புதிய ஐபோன் எஸ்இ அறிமுகப்படுத்துவதாக ஆப்பிள் அறிவித்தது. 2020-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிறிய ஐபோன் மாடலின் சமீபத்திய பதிப்பாக இது இருக்கிறது. ஆனால் முந்தைய சாதனத்தில் பயன்படுத்தப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட்டிற்கு பதிலாக இதில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 5ஜி ஆதரவோடு வருகிறது.

பின்புறத்தில் 12 எம்பி கேமரா சென்சார்
ஐபோன் எஸ்இ 5ஜி பின்புறத்தில் 12 எம்பி கேமரா சென்சார் உடன் வருகிறது. புகைப்பட அம்சங்களை பொறுத்தவரையில், இது ஸ்மார்ட் எச்டிஆர் 4, டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை போன்ற ஐபோன் 13 கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 5ஜி ஆனது ஐஓஎஸ் 15 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பல வருடங்களுக்கு புதுப்பிப்புகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ
புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 12-ல் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்ட் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது அலுமினியம் மற்றும் கண்ணாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் பொருத்தப்பட்ட 12 எம்பி சென்சார் உடன் இது வருகிறது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி67 மதிப்பீடு உடன் இது வருகிறது.

புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ விலை மற்றும் கிடைக்கும் தன்மை
புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஸ்டார்லைட், மிட்நைட் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று சேமிப்பக கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இதன் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.43,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.48,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.58,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட் ஐபோன் மாடல் ஆனது மார்ச் 11 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 30 நாடுகளில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்க உள்ளது. மார்ச் 18 முதல் ஷிப்பிங் நடைபெறும்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ விவரக்குறிப்புகள்
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஆனது 1334 x 750 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 625 cd/m2 அதிகபட்ச பிரகாசம் கொண்ட 4.7-இன்ச் எச்டி ரெடினா ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வெளியிடப்பட்டது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் 16 கோர் நியூரல் எஞ்சிந் மற்றும் 64 பிட் கட்டமைப்புடன் 5 என்எம் செயல்முறை அடிப்படையிலான ஏ15 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஐஓஎஸ் 15 மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஆனது இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இரண்டாவது சிம் இசிம் ஆகும். ட்ரூ டோன் ஃப்ளாஷ், 60 எஃப்பிஎஸ் இல் 4கே வீடியோ பதிவு, ஓஐஎஸ் மற்றும் 240 எஃப்பிஎஸ் மூலம் முழு எச்டி 1080 பிக்ச்ல வீடியோ பயன்முறை ஆதரவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ஒற்றை 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் முழு எச்டி 1080 பிக்சல் வீடியோ பதிவுடன் கூடிய 7 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 சாதனத்தின் பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டச் ஐடி கைரேகை ஸ்கேனர், 5ஜி, எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, ரீடர் பயன்முறையுடன் கூடிய என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இது உள்ளமைக்கப்பட்ட லி அயன் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இது 15 மணிநேரம் வரையிலான வீடியோ ப்ளேபேக் அம்சத்தை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications