Home
News

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.!

ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி/3ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32ஜிபி மற்றும்64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது.

By Prakash S

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட நிறுவனம். இது தன் புதிய தலைமையகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிட வடிவில் நிர்மானித்து வருகிறது. ஆப்பிள் ஐபோன் மாடல்கள் பொதுவாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இந்த ஐபோன் எஸ்இ 2 மாடலை இந்தியாவில் தயார் செய்ய முடிவு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.!

மேலும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது, இப்போது வெளிவரும் ஐபோன் எஸ்இ2 மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் சாதனம் 4.2 அல்லது 4.5 டிஸ்பிளே வடிவமைப்பில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.!

ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி/3ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32ஜிபி மற்றும்64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது.

இக்கருவி அதிவேக இன்டெல் எக்ஸ்எம்எம் 7560 மொடம் மற்றும் குவால்காம் எஸ்டிஎக்ஸ் 20 எல்டிஇ மோடம் போன்ற தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.!

இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 மாடலில் 2100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone SE 2 could be an exclusive made in India product ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X