300 அடி பள்ளத்தில் விழுந்த கார்! மேஜிக் செய்து 2 பேரை காப்பாற்றிய iPhone.. நடந்தது என்ன?

|

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் iPhone 14 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு வருடம் அறிமுகமாகும் ஐபோன் மாடல்களிலும் வித்தியாசமான மற்றும் புதுமையான் அம்சத்தை புகுத்துவது ஆப்பிள் வழக்கம். அப்படி ஒரு அம்சத்தை தான் ஆப்பிள் புதிய ஐபோன் 14 இல் அறிமுகம் செய்தது. அது அவசரகால SOS ஆகும்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல் உயிர்காக்கும் கேட்ஜெட்களாகவும் ஆப்பிள் செயல்பட்டு வருவது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. மாரடைப்பு, கார் விபத்துகள் உட்பட பல ஆபத்துகளில் இருந்து ஏணையோரை ஆப்பிள் சாதனங்கள் காப்பாற்றி இருக்கிறது. அதன்படி நடந்த ஒரு சம்பவத்தை தான் பார்க்கப்போகிறோம். கார் விபத்தில் சிக்கி ஆழமான தொலைதூர பள்ளத்தாக்கில் விழுந்த இரண்டு பேரின் உயிரை ஆப்பிள் காப்பாற்றி இருக்கிறது.

300அடி பள்ளத்தில் விழுந்த கார்! மேஜிக் செய்து 2பேரை காப்பாற்றிய iPhone

கலிபோர்னியாவில் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் உள்ள ஏஞ்சல்ஸ் வன நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இதுகுறித்து MacRumours இல் வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம். மலையின் ஓரத்தில் இருந்து சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் கார் ஒன்று விழுந்துள்ளது. விபத்து நடந்த காரில் இருவர் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவரிடம் ஐபோன் 14 இருந்திருக்கிறது.

விபத்து நடந்ததை கண்டறிந்த ஐபோன் 14 அவசர தொடர்புகளுக்கு அவசரகால SOS ஐ அனுப்பியது. விபத்து நடந்த இடத்தில் செல்லுலார் நெட்வொர்க் இணைப்பு இல்லாத காரணத்தால், மீட்பு பணியாளர்கள் செயற்கைக்கோள் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

Montrose Search & Rescue Team ட்விட்டர் பக்கத்தில் மீட்புப் பணி வெளியிட்ட தகவலின்படி, டிசம்பர் 14 மதியம், LASD CrescentaValleyக்கு ஆப்பிள் அவசர செயற்கைக்கோள் சேவையில் இருந்து ஒரே வாகன விபத்தில் சிக்கிய இருவர் குறித்த அழைப்பு வந்தது. ஐபோன் 14இல் செயற்கைக்கோள் சேவை இருப்பதால், மீட்புக் குழுவினர் ரிலே மையத்திற்கு டெக்ஸ்ட் மூலம் தகவல் அனுப்பினர்.

இதையடுத்து ரிலே மையம் விபத்து நடந்த இடத்தின் துல்லியமான latitude மற்றும் longitude குறித்த தகவலை வழங்கியது. இதையடுத்து ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்புக் குழுவினர் காப்பாற்றி இருக்கின்றனர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் இந்த விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

இருவரும் சுமார் 20 வயதுடையவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. லேசான மற்றும் மிதமான காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது முதன்முறையல்ல ஆப்பிள் பல நிலைகளில் இருந்து பலரை காப்பாற்றி இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 இல் உட்பொதிக்கப்பட்டிருந்த அம்சமானது கார் விபத்தை தானாக கண்டறிந்து உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் தன்மை கொண்டதாகும்.

300அடி பள்ளத்தில் விழுந்த கார்! மேஜிக் செய்து 2பேரை காப்பாற்றிய iPhone

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புது மாடல்களிலும் புதுமைகளை புகுத்துவது வழக்கம். அதன்படி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ்களில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி இருந்தது. அதில் ஒன்று செயற்கைக்கோள் இணைப்பு. இந்த அம்சம் குறித்து அனைவரும் அறிந்ததே. இதைவிட நிறுவனம் ஐபோன் 14 மாடலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி இருக்கிறது. அதில் ஒன்று தான் விபத்து கண்டறிதல் அம்சம்.

விபத்து கண்டறிதல் அம்சம் என்று பெயர் குறிப்பிடுவது போல், இந்த அம்சமானது நீங்கள் கடுமையான கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 உங்களுடன் இருக்கும்போது விபத்துக்கு உள்ளானால் அதை தானாக கண்டறிந்து அவசர சேவைகளுக்கு டயல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Apple iPhone Saves 2 People Who is Fall 300 Feet In Car Crash: Do You Know How?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X