விலை குறைக்கப்பட்ட ஐபோன்கள், உடனே வாங்க என்ன செய்யனும்.??

Written By: Jagatheesh

பண்டிகை காலம் நிறைவடைந்திருந்தாலும் இன்றும் சில கருவிகளுக்குத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் வெளியீடு காரணமாக அந்நிறுவனத்தின் முந்தைய மாடல் கருவிகளின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் படி முந்தைய கருவிகளின் விலை குறைக்கப்பட்டு வரும் நிலையில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் கருவிகளையும் பயனர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைக்கப்பட்ட விலை

குறைக்கப்பட்ட விலை

ஆப்பிள் ஐபோன் 6 16 ஜிபி தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்ட விலையில் ரூ.33,990/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஐபோன் 6எஸ் 16 ஜிபி ரூ.40,990/- க்கு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் 64 ஜிபி விலை ரூ.44,999/- என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கருவி அமேசான் தளத்தில் ரூ.51,972/-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 6 பிளஸ்

ஐபோன் 6 பிளஸ்

பெரிய திரை கொண்ட ஐபோன் 6 பிளஸ் 16 ஜிபி குறைக்கப்பட்ட விலையில் ரூ.40,990க்கு பெற முடியும், இதே கருவி அமேசான் தளத்தில் ரூ.47,999/- விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 6எஸ் பிளஸ்

ஐபோன் 6எஸ் பிளஸ்

பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் பிளஸ் 16 ஜிபி ரூ.49,400/- விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதே கருவியின் 64 ஜிபி மாடல் ரூ.59,998 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ்

சிறிய ஐபோன் 5எஸ் கருவியை வாங்க விரும்புவோர் ஐபோன் எஸ்இ கருவியினைக் குறைக்கப்பட்ட விலைகளில் வாங்கிட முடியும். ஐபோன் எஸ்இ 16 ஜிபி ரூ.30,950/-க்கும் 64 ஜிபி ரூ.41,042/-க்கும் வாங்கிட முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Apple iPhone's get big discount only on Flipkart
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot