ஆப்பிள் ஹோலி பண்டிகை சலுகை: அதிக தள்ளுபடி விலையில் ஐபோன் 13, ஐபோன் 12, ஐபோன் 11- சபாஷ் சரியான நேரம்!
உயர்நிலை, உச்சப்பட்சம், அதீத அம்சம், கிளாஸ் லுக் இது அனைத்தும் சொந்தமான ஒரு சாதனம் ஐபோன். ஐபோன் எப்போதுமே விலை உயர்ந்த பிரிவில் தான் இருக்கும். பல முன்னணி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி இருந்தாலும் அனைவருக்கும் ஐபோன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் நோக்கமும் இருக்கத்தான் செய்யும். ப்ரீமியம் ஐபோன் சாதனங்களை பயன்படுத்த விரும்பினால் சமீபத்திய ப்ரீமியம் சாதனங்களை வாங்குவதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ஆப்பிள் சில சிறந்த ஐபோன் சாதனங்களுக்கு ஹோலி விற்பனை சலுகையை அறிவித்திருக்கிறது. ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 தொடரை பெரும் தள்ளுபடி விலையில் பெறலாம்.

ஐபோன் ஆப்பிள் ஹோலி சலுகை
ஐபோன் ஆப்பிள் ஹோலி சலுகை இந்தியாவில் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர் தளமான அப்ட்ரானிக்ஸ் மற்றும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. ஐபோன் 13 சாதனம் வாங்குபவர்கள் வெறும் ரூ.53,300 என்ற விலைக்கும் ஐபோன் 12 சாதனத்தை வெறும் ரூ.24,000 என்ற விலைக்கும் வாங்கலாம். ஐபோன் 11 சாதனத்துக்கு சில பரிமாற்ற ஒப்பந்தங்கள் மற்றும் வங்கி சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளை பெறுவதற்கு சில ஒப்பந்தங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன.

அமேசான் சிறந்த சலுகை
புதிய ஐபோன் எஸ்இ 2022 சாதனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தில் ஐபோன் 13 சாதனத்தின் அதே சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும் ஐபோன் எஸ்இ 2022 சாதனத்தை விட ஐபோன் 13 விலை அதிகமாகவே இருக்கிறது. ஐபோன் 13 சாதனம் வாங்க விரும்பினால் அமேசான் சிறந்த சலுகையை வழங்குகிறது. ஐபோன் 13 சாதனத்தின் விலை ரூ.79,900-க்கு விற்கப்பட்ட நிலையில் அமேசான் தளத்தில் இந்த சாதனம் ரூ.74,900-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 சாதனத்தை எப்படி ரூ.53,300-க்கு வாங்குவது என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

அப்ட்ரானிக்ஸ் தளத்தில் தள்ளுபடி
ஆப்பிள் ஐபோன் 12 தொடர் சாதனம் அப்ட்ரானிக்ஸ் தளத்தில் ரூ.9000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் இதன் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் சாதனம் விலை ரூ.56,000 என இருக்கிறது. கூடுதலாக ஐசிஐசிஐ பேங்க், கோடக் பேங்க் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை ரூ.5000 தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதன் மூலம் இந்த சாதனத்தை ரூ.51000 என வாங்கலாம். அதேபோல் ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தை அமேசான் தளத்தில் எப்படி தள்ளுபடியுடன் வாங்கலாம் என்பது குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை
அப்ட்ரானிக்ஸ் நிறுவனம் பழைய ஐபோன் 11 சாதனத்தை பரிமாற்றம் செய்து புதிய சாதனம் வாங்கும் போது ரூ.23,100 என வாங்கலாம். மொத்தம் ரூ.27,900 விலைக்குறைப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிற பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை அப்ட்ரானிக்ஸ் தள்ளுபடி செய்கிறது. இ-வவுச்சர் வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். அதாவது ஐபோன் 12 வாங்கும் போது ரூ.5000 இ-வவுச்சர் வழங்கப்படுகிறது.

அமேசான் தளத்தில் தள்ளுபடி விலை
ஆப்பிள் ஐபோன் 11 அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. அமேசானில் தற்போது ஐபோன் 11 சாதனம் ரூ.49900 என கிடைக்கிறது. கூடுதலாக வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 11 சாதனத்தை ரூ.45,900 என்ற விலையில் வாங்க முடியும். பழைய சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ஐபோன் 11 வாங்கும் போது ரூ.13,750 என தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த அனைத்து தள்ளுபடிகளும் நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது. சாதனங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய சாதனம் வாங்கும் போது எக்ஸ்சேஞ்ச் செய்யும் பழைய சாதனத்தின் அம்சங்களை துல்லியமாக சரி பார்க்க வேண்டும்.

ஐபோன் 13 தள்ளுபடி விலை விவரம்
ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் எஸ்இ 3 2022 மாடல் கவர்ச்சிகரமான அம்சங்கள் உடன் வருகிறது. ஐபோன் 13 சாதனத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 அடிப்படை மாடல் விலை வெறும் ரூ.53,100 ஆக இருக்கிறது. அமேசானில் வழங்கப்படும் தள்ளுபடியில் ஐபோன் 13 என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ.79,900 ஆக இருந்தது. தற்போது அமேசான் தள்ளுபடி விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனத்துக்கு ஆறு சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சாதனத்தின் விலை ரூ.74,900 என வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உட்பட இன்னும் சில தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வெறும் ரூ.53,100 என வாங்கலாம். பழைய சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ஐபோன் 13 வாங்கும் போது ரூ.15,800 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம். இதன் மூலம் இந்த சாதனத்தை ரூ.59,100 என கிடைக்கிறது. அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.53,100 என வாங்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை விவரங்கள்
எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆனது நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பும் சாதனம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனத்தின் தரம், தயாரிக்கப்பட்ட ஆண்டு, சாதன சேதங்கள், திரையின் நிலை உள்ளிட்டவைகளை அமேசான் சரிபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தான் ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.15,800 தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








