Home
News

அட்ராசக்கை.. உருமாறுகிறது ஆப்பிள் iPhone.. இனி ஐபோன்ல் ஃபோல்டப்பில் போன்னாக வரப்போகிறது..

இன்றைய ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடியாக இருந்தது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் (iPhone) என்பது நிதர்சனமான உன்மை. ஆனால் ஃபோல்டபுல் (Foldable) போன்களின் பக்கம் ஆப்பிளின் பார்வை ஏன் விழவில்லை என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் இப்போது கிடைத்துவிட்டது.

ஆப்பிள் நிறுவனம் ஃபோல்டபுல் ஐபோன்களை உருவாக்க தயாராகிக் கொண்டிருப்பதாக வதந்திகள் உலாவிவரும் நிலையில் அதனை உறுதிசெய்யும் விதமாக மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் ஃபோல்டபுல் ஐபேட்களை (Foldable iPad) உருவாக்கப்போவதாக எதிர்பார்த்து வந்த நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ஆப்பிளின் ஐபோன்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அட்ராசக்கை.. உருமாறுகிறது ஆப்பிள் iPhone.. இனி ஐபோன்ல் ஃபோல்டப்பில்..

சமீபத்தில் வெளியான அறிக்கையில் உள்ள தகவல்களின்படி ஆப்பிளின் ஃபோல்டபுல் ஸ்மார்ட்போன் ப்ரோட்டோடைப்களின் தயாரிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஃபோல்டபுல் ஐபோன்களின் டிசைன் சாம்சங்கின் கேலக்ஸி Z ஃப்ளிப் மாடல்களின் டிசைகளை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஃபோல்டபுல் ஐபோன்கள் இரண்டு டிசைன்களின் இப்போது உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் ஆப்பிள் நிறுவனம் ஃபோல்டபுல் ஐபோன்களின் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஃபோல்டபுல் ஐபோன்களின் திக்னஸ் (Thickness) சாதாரண ஐபோனைவிட பாதியாக இருப்பது போல வடிவமைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரிக்கை இவர்கள் கையாண்டால் ஃபோல்டபுல் ஐபோன் மடிக்கப்படும்போது பெரியதாக இருப்பது போல தெரியாது.

மேலும் ஒரு சிறப்பம்சமாக உள்பக்க ஸ்க்ரீனுடன் சேர்த்து வெளிப்பக்க ஸ்க்ரீனும் இந்த ஃபோல்டபுல் ஐபோனில் அமைப்போவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான டிசைன்கள் முடிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் அதன் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி தொடர்பான வடிவமைப்புகளில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஃபோல்டபுல் போன்களை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதாலும் ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதாலும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைக்க பல முயற்சிகளை அதன் தயாரிப்பாளர்கள் எடுத்துவருகின்றனர்.

ஆப்பிளின் ஃபோல்டபுல் ஐபோன் தயாரிப்பை உறுதி செய்யும் வகையில் வெளியான மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஆப்பிள் நிறுவனம் தான் திட்டமிட்டிருக்கும் இரண்டு ஃபோல்டபுல் ஐபோன் மாடல்களுக்கும் தேவையாக பாகங்களை எஷியன் மேனுஃபாக்சுரர்ஸ் (Asian Manufacturers) என்ற நிறுவனத்திடன் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஃபோல்டபுல் ஐபோனின் வருகை உறுதிசெய்யப்பட்டாலும், தாங்கள் எதிர்பார்த்த தரம் வரவில்லை என்றால் இந்த திட்டத்தை ஆப்பிள் கைவிடவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் ஃபோல்டபுல் ஐபேட் என்ற வதந்தியும் உண்மை போல தான் தெரிகிறது. ஆப்பிளின் ஐபேட் மினியைப் போலவே 8'' இன்ச் டிஸ்ப்ளேவுடன் உருவக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஐபேட் உள்பக்கமாக மடக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இது ஐபேட் என்பதால் ஐபோன் போல மெல்லியதாக வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதன் காரணமாக் ஃபோல்டபுல் ஐபோன்களை விட ஃபோல்டபுல் ஐபேட்களை உருவாக்குவது கொஞ்சம் எளிமை போல காணப்படுகிறது.

ஃபோல்டபுல் ஐபோன் அல்லது ஐபேடில் இருக்கும் ஒரு முக்கியமான சிக்கலாக கருதப்படுவது அடிக்கடி மடிக்கப்படுவதால் ஏற்படும் சேதம். இந்த சிக்கலில் முக்கிய கவனம் செலுத்த விரும்பும் ஆப்பிள் நிறுவனம் ஸ்க்ரீனை மிகவும் ஃப்ளாட்டாக (Flat) வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக மடக்கப்பட்ட ஸ்க்ரீன்களுக்கு மத்தியில் உராய்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிக்கலுக்கான தீர்வு இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஃபோல்டபுல் ஐபோனை ஸ்மார்ட்போன் சந்தையில் சாத்தியமாக்கும் என்று நம்பிக்கை சமீபகாலமாக ஐபோன் விரும்பிகளுக்கு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone Foldable Smartphone Coming Soon Check Specifications and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X