ஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்
ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் வகைகளில் உள்ள பேட்டரி குறைபாடு மூலம் அதன் வேகம் குறைந்து வருவதாக சர்ச்சைக்குரியசெய்திகள் பரவி வருகின்றன.

இதை குறித்து அறிந்த ஆப்பிள் நிறுவனம், அதன் பழைய ஐபோன்களின் செயல்பாட்டில் வேகம் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிப்பதாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.
தங்களின் பழைய ஐபோன்களின் பேட்டரிகளைக் குறைந்த செலவில் மாற்றி தருவதாக, அமெரிக்காவில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் பழைய ஐபோன் வகைகளின் பேட்டரிகளை மாற்றுவதற்கான கட்டணத்தை, இந்நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் ஒரு செய்தித்தொடர்பாளர் கூறியதாக 91மொபைல்ஸில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, இந்தியாவைச் சேர்ந்த பழைய ஐபோன்களின் பயனர்கள், அவற்றின் பேட்டரிகளை ரூ.2 ஆயிரம் மட்டும் செலவிட்டு மாற்றிக் கொள்ளலாம்.
இந்தத் தொகையில் வரித் தொகையும் உட்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி மாற்றுவதற்கான இந்தக் கட்டண குறைப்பானது, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஆகிய வகைகளுக்கு பொருந்தும்.
முன்னதாக, மேற்கண்ட இந்த வகைகளுக்கு பேட்டரி மாற்றுவதற்கு ரூ.6,500 செலவிட வேண்டியிருந்த நிலையில், தற்போது அது ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ஐபோன்களுக்கான பேட்டரியை மாற்ற, நாடெங்கும் உள்ள ஆப்பிளின் மூன்றாம் தரப்பு சேவை பங்குத்தாரர்களை, பயனர்கள் அணுகலாம்.
ஐபோன் 6எஸ் ஃபோனை வாங்கிய ஒரு ரேடிடிட் பயனர், தனது ஃபோனில் ஐஓஎஸ் 11.2 மேம்பாட்டை செய்த போது, அதன் வேகம் குறைந்ததை அறிந்து, இந்தப் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டு வந்தார். பேட்டரியை மாற்றிய போது, மீண்டும் ஃபோனின் செயல்பாடு வழக்கத்திற்கு திரும்பியது. இந்தப் பயனர், கீக்பின்ஞ் என்ற அளவீட்டு அப்ளிகேஷன் மூலம் மீண்டும் பரிசோதித்தார். அப்போது பழைய ஃபோன் வகைகள் மென்பொருள் மேம்பாட்டின் மூலம் செயல்பாட்டில் வேகத்தை இழப்பது தெரியவந்தது.
இந்த பிரச்சனையைத் தொடர்ந்து, பழைய ஐபோன்களின் செயல்பாட்டில் வேகம் குறைவது உண்மை என்றாலும், பழைய பேட்டரிகளின் மூலம் பயனருக்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது என்று ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்தது.
இந்நிறுவனத்தின் தர்க்க ரீதியான பேச்சை தொடர்ந்து, பழைய ஃபோன் வகைகளின் வேகம் குறைந்த செயல்பாட்டில் இந்த பிராண்டின் முடிவை, பயனர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் பயனர்களிடம் இருந்து மேற்கண்ட தகவலை மறைத்து வைத்ததாக, இந்நிறுவனத்தின் மீது வழக்குகள் போடப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஐபோன்களுக்கான ஒரு புதிய மென்பொருள் மேம்பாட்டை விரைவில் வெளியிடப் போவதாக, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications