5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஐபோன் 8.!

Written By:

ஆப்பிள் தற்போது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. அதைமுன்னிட்டு ஐபோன் 8 என்ற ஸ்மார்ட்போனை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த ஐபோன் 8 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்க்கு சிறந்த தோற்றத்தை கொண்டுள்ளது, அதன்பின் புதிய மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஐபோன8 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஐபோன்8 வெளிவர இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் பொறுத்தவரை 5.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் வளைந்த கிளாஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது, மிகவும் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. தற்போது இணையத்தில் வந்துள்ள புகைப்படத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி ஆப்பிள் மியூசிக் டாப், லாக் ஸ்க்ரீன், ஐ மெசேஜ் போன்ற புதிய செயலிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஐஒஎஸ்11:

ஐஒஎஸ்11:

தற்போது வரும் ஐபோன் 8 பொதுவாக ஐஒஎஸ்11-ல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய புகைபடங்களில் மேம்படுத்தப்பட்ட பல்வேறு செயலிகள் இருக்கும் வகையில் தெரிகிறது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

இக்கருவியில் கைரேகை ஸ்கேனர் வசதியும், அதன்பின் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது, டிஸ்பிளேவில் பல மாற்றங்கள் வந்துள்ளது. மேலும் இவற்றில் 3டி சென்சார் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரட்டை கேமரா:

இரட்டை கேமரா:

இந்த ஐபோன் 8-ல் செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ள இரட்டை கேமரா வடிவமைப்பும், இதனிடையே எல்இடி ஃப்ளாஸ் ஆதரவுகொண்டுள்ளது இந்த சிறந்த ஐபோன்8. மேலும் செல்பீ கேமராவில் குறிப்பிட்ட சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஐபோன் 8 ஆரம்பகட்ட விலைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 1000டாலர்கள் நிர்னயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,இந்திய விலைமதிப்பில் ரூ.64,300 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple iPhone 8 design confirmed image showcased here are the features of the new smartphone : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot