Home
News

சாம்சங் வடிவமைப்பை 'ஈ அடிச்சான் காப்பி' அடிக்கும் ஆப்பிள்.!?

ஒரு புதிய அறிக்கையின் படி, சாம்சங் போன்ற ஒரு வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளேவை ஐபோன் 8 கருவி வடிவமைப்பில் பணியாற்றி வருகிறதாம்.

By Muthuraj

ஐபோன் 8 கருவியில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலமே இருக்கிறது எனலாம். அம்மாதிரியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 கருவி சார்ந்த லீக்ஸ் செய்திகள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருக்க இப்பொது ஆப்பிள் ஐபோன் 8 கருவியின் டிஸ்ப்ளே வடிவமைப்பு சார்ந்த ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

அப்படியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின் படி, சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்கள் போன்ற ஒரு வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளேவை ஐபோன் 8 கருவி வடிவமைப்பில் இடம்பெற செய்ய ஆப்பிள் நிறுவனம், பணியாற்றி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளே

வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளே

கொரியாவில் இருந்து புதிதாக உருவாகி உள்ள வதந்திகளின் படி, சாம்சங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு வளைந்த ஓல்இடி (கரிம ஒளி உமிழும் டையோடு) போன்ற டிஸ்ப்ளே ஆனது ஐபோன் 8 கருவியின் வடிவமைப்பில் இடம்பெற வைக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிளாஸ்டிக் ஓல்இடி பேனல்

பிளாஸ்டிக் ஓல்இடி பேனல்

தென் கொரிய செய்தி தளமான தி கொரியன் ஹெரால்ட் தான் இந்த தகவலை வழங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் சாம்சங்-தயாரிப்பான வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி பேனல்களை தனது ஐபோன் 8 வடிவமைப்பில் கொண்டுவரும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் முன்பு, ஐபோன் 8 கருவியில் ஓல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் என்று வெளியான லீக் தகவல் ஒன்று இதனுடன் சற்று ஒற்றுப்போவது நம்பிக்கை அளிக்கிறது என்றே கூறலாம்.

ஆல் கிளாஸ் பாடி

ஆல் கிளாஸ் பாடி

மறுபக்கம் பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி-குயோ புதிய ஐபோன் 8 கருவியானது ஆல் கிளாஸ் பாடி கொண்டு வெளியாகும் என்று கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மில்லியன் கணக்கில் ஆர்டர்

மில்லியன் கணக்கில் ஆர்டர்

தி கொரியன் ஹெரால்ட் செய்தி தளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் மில்லியன் கணக்கில் வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே காலை தயாரிக்க சாம்சங் நிறுவனத்திடம் ஆர்டர் வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கிறது. அதாவது ஆப்பிளின் அடுத்த கருவியானது அனைத்துமே பிளாஸ்டிக் ஓல்இடி கொண்டுதான் கிளாஸ் கொண்டு இல்லை என்பதை இது உறுதி செய்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நியூ சென்ஸிங் தொழில்நுட்பம்

நியூ சென்ஸிங் தொழில்நுட்பம்

இதுமட்டுமின்றி ஹெரால்ட் அறிக்கை, ஆப்பிள் அதன் போட்டியாளர்களிடம் இருந்து வேறுபாடு காட்டும் நோக்கத்தில் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனில் 'நியூ சென்ஸிங் தொழில்நுட்பம்' பயன்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது.

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

உடன் வெளியான வதந்திகள், ஆப்பிள் 2017-இல் வெளியாகும் அதன் அடுத்த ஐபோன் கருவியில் ஹோம் பொத்தானை நீக்கி அதற்கு பதிலாக திரையில் எங்கேனும் ஒரு கைரேகை ஸ்கேன் நுட்பத்தினை புகுத்தும் என்றும் அறிவித்துள்ளன. உடன் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜனவரி முதல் ரூ.11,999/-க்கு சியோமி ரெட்மீ நோட் 4, என்னென்ன அம்சங்கள்.?

Best Mobiles in India

English summary
Apple iPhone 8 to come with curved, plastic OLED panel. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X