ஐபோன் 7 பிளஸ் வீடியோ புதிய தகவல்கள் கசிந்தது!
ஆப்பிள் ஐபோன் கருவி வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் புதிய கருவியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. ஐபோன் 7 கருவிக்கான முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்கி அவை செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப் கருவியின் வீடியோ ஒன்று யூட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

வீடியோ
அதன் படி அன்பாக்ஸ் தெரப்பி என்ற யூட்யூப் சேனலில் ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப் கருவியின் ஹேண்ட்ஸ்-ஆன் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 7 பிளஸ்
இந்த வீடியோவில் முன்பு வெளியான வீடியோக்களை விட அதிக தெளிவான பார்வை கிடைக்கின்றது. ஐபோன் 7 பிளஸ் கருவியில் டூயல் லென்ஸ் காணப்படுகின்றது.

வடிவமைப்பு
வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இல்லை என்றாலும் வீடியோவில் காண்பிக்கப்படும் ஐபோன் 7 பிளஸ் கருவி முற்றிலும் புதிய நிறம் கொண்டுள்ளது.

ஹெட்போன் ஜாக்
ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும்படி ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.

வயர்லெஸ் சார்ஜிங்
இதோடு வயர்லெஸ் சார்ஜிங் அம்சம், ஸ்மார்ட் கனெக்டர் போன்றவை புதிய கருவியில் வழங்கப்படலாம் என இந்த வீடியோவும் தெரிவிக்கின்றது.

அளவு
ஐபோன் 6 பிளஸ் கருவியை விடச் சற்றே சிறியதாகவும், மெலிதாகவும் இருக்கலாம் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா
ஏற்கனவே வெளியான தகவல்களை மேலும் உறுதி செய்யும் படி புதிய கருவியில் கேமரா அதிகளவு மாற்றம் காணலாம். இதோடு புதிய கேமரா அக்சஸரிகளும் புதிய கருவியுடன் வழங்கப்படலாம் என்றே தெரிகின்றது.

கருவி
முன்பு வழங்கப்பட்டதைப் போல் இம்முறையும் இரண்டு ஐபோன் கருவிகள் வெளியாகலாம். இடையில் மூன்று கருவிகள் வெளியாகலாம் எனக் கூறப்பட்டாலும் சந்தை வல்லுநர்கள் இரு ஐபோன் கருவிகள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

உறுதி
ஆப்பிள் சார்பில் புதிய ஐபோன் கருவி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் உண்மையான அம்சங்கள் மற்றும் உறுதியான தகவல்களை அறிந்து கொள்ள காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஆப்பிள் வெளியிடும் வரை காத்திருக்க முடியாது எனில் ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப் வீடியோவினை பாருங்கள்.
வீடியோ
ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப் வீடியோ.


Click it and Unblock the Notifications