ஐபோன் 7 கருவிகளில் விசித்திர சத்தம், சிக்கலில் ஆப்பிள்.!

Written By:

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை அதிக ஆர்வத்துடன் வாங்கியோருக்குக் கருவியில் இருந்து வெளியேறும் விசித்திர சத்தம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதோடு, பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து வெளியான சில தகவல்களில் விசித்திர சத்தத்திற்கு புதிய ஏ10 ஃபியூஷன் பிராசஸர் காரணமாக இருக்கலாம் என்றும், அதிகளவு பயன்பாடுகளில் சத்தம் அதிகமாவதாகவும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விசித்திர சத்தம்

விசித்திர சத்தம்

ஐபோன் 7 கருவியில் ஏற்படும் விசித்திர சத்தத்தை முதலில் தெரியப்படுத்தியவர் ஸ்டீபன் ஹேக்கட் ஆவார். தனது புதிய ஐபோன் கருவியில் ஏற்பட்ட விசித்திர சத்தத்தினை பதிவு செய்து அதனை அப்படியே யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றார்.

பதிவு

பதிவு

தனது ஐபோன் 7 பிளஸ் அதிகளவு பயன்பாடுகளின் போது விசித்திர சத்தத்தை ஏற்படுத்துகின்றது என்ற தகவலுடன் யூட்யூபில் பதிவேற்றம் செய்த வீடியோ முகவரியையும் ஸ்டீபன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆதரவு

ஆதரவு

இதே கருத்தினை டேரெல் எதெரிங்டன் என்பவரும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தனது புத்தம் புதிய ஐபோன் 7 கருவியில் விசித்திர சத்தம் ஏற்படுவதாகப் பதிவு செய்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு பிரிவு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

விளக்கம்

தி வெர்ஜ் செய்தியில் இது குறித்த விளக்கத்தின் போது இந்த விசித்திர சத்தமானது எல்லா பிராசஸர்களிலும் வரக்கூடிய ஒன்று தான், என்றும் தற்சமயம் சில பயனர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்வு

தீர்வு

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஏற்பட்டிருக்கும் இந்த விசித்திர சத்தம் குறித்த பிரச்சனைக்கு தற்சமயம் வரை எவ்வித தீர்வும் கிடையாது. கருவி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் வேறு கருவிகளை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என லைஃப்ஹேக்கர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கருவி

புதிய கருவி

விசித்திர சத்தம் குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடாத நிலையில், ஸ்டீபன் தன் கருவியில் ஏற்பட்ட பிரச்சனையை ஆப்பிள் சேவை மையத்தில் முறையிட்டுள்ளார். ஆப்பிள் சார்பில் புதிய கருவி வழங்குவதாகவும், விநியோகம் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் புதிய கருவியை வழங்க சில காலம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

விலை

விலை

ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி மாடல் ரூ.72,000 என்றும் 32 ஜிபி ஐபோன் 7 கருவியின் விலை ரூ.60,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 கருவியின் 128 ஜிபி மாடல் ரூ.70,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.80,000க்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

காணொளி

ஐபோன் 7 கருவியில் வெளியாகும் விசித்திர சத்தம் : காணொளி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple iPhone 7, iPhone 7 Plus units making ‘wheeze’ sounds Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot