ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?
அடுத்த தலைமுறை ஆப்பிள் கருவி குறித்து பல வதந்திகள் வலம் வரும் நிலையில் அந்த கருவி கட்டாயம் ஐபோன் 6எஸ் தான் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். மேலும் இந்த கருவி ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் என இரு மாடல்களில் வெளியாகும் என்றும் நம்புகின்றனர்.
சாம்சங் கேலக்ஸி எஸ்7 : கான்செப்ட் புகைப்படங்கள்..!?
இணையத்தில் வேகமாக பரவி வரும் பல தகவல்களில் இருந்து புதிய ஐபோன் 6எஸ் கருவியில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவியில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பாருங்கள்...
ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

வடிவமைப்பு
அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியான ஐபோன் 6 கருவியை தொடர்ந்து வெளியாக இருக்கும் எஸ் அப்டேட் பெறும் கருவியில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகின்றது. அதிகபட்சம் புதிய நிறங்களில் இந்த கருவி வெளியாகலாம்.

ஐஓஎஸ்
அடுத்த தலைமுறை ஐபோனில் ஐஓஎஸ் 9 இயங்குதளம் மற்றும் சிரி, ஆப்பிள் பே மேம்படுத்தப்படும் என்றும் புதிய நியுஸ் அப்ளிகேஷன் வழங்கப்படலாம்.

பிராசஸர்
ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் ஏ9 பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் இது முந்தைய பிராசஸர்களுடன் 35 சதவீதம் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் என்றும் 2ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமரா
வழக்கமான 8 எம்பி ப்ரைமரி கேமராவுக்கு பதிலாக இம்முறை ஆப்பிள் நிறுவனம் 12 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கலாம். இதோடு ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைஸர் மற்றும் ஆட்டோபோகஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

பேட்டரி
ஏ9 சிப்செட் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என்பதால் பேட்டரியை பொருத்த வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றே கூறப்படுகின்றது.

மெமரி
குறைந்த பட்சம் 16 ஜிபி மெமரியும் இதோடு 64 மற்றும் 128 ஜிபி வழங்கப்படலாம் என்றே தெரிகின்றது.

யுஎஸ்பி டைப்-சி
யுஎஸ்பி டைப்-சி தற்சமயம் அதிக பிரபலமாகி வருவதால் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளிலும் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

டச் ஐடி
அடுத்த ஐபோனில் டச் ஐடி வழங்கப்படலாம் என்றும் இது ஆப்பிள் பே அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

ஃபோர்ஸ் டச்
ஐபோன் 6எஸ் கருவியில் முக்கிய சிறப்பம்சமாக ஃபோர்ஸ் டச் இருக்கும் என்றே கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பமானது சிறிய அழுத்தங்களுக்கும், பெரிய அழுத்தங்களுக்குமான வித்தியாசங்களை ப்ரெஷர் சென்சிட்டிவிட்டியின் படி அறிந்து கொள்ளும்.

வெளியீடு
வழக்கமான ஆப்பிள் சம்பிரதயாப்படி புதிய ஆப்பிள் கருவிகளும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications