புதிய ஐபோன் இந்தியாவில் வெளியானது, அனைவரும் கவனிக்க வேண்டியவை..!!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவிகள் இந்தியாவில் வற்பனைக்கு வந்தது. அதன் படி இன்று அதிகாலை அதாவது 12.00 மணி முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளின் விற்பனை துவங்கியது. புதிய கருவிகளை வாங்க ஆப்பிள் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இந்தியாவில் ஐபோன் 6எஸ் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி விலை முறையே ரூ.62,000, ரூ.72,000 மற்றும் ரூ.82,000 என்றும் 6எஸ் ப்ளஸ் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளியான சில தினங்களிலேயே இந்தாயாவிலும் புதிய ஐபோன் கருவிகள் விற்பனைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் புதிய ஐபோன் கருவிகளில் அனைவரும் கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

3டி டச்

3டி டச்

முன்பு கூறப்பட்டதை போன்றே 3டி டச் அம்சம் ஃபோர்ஸ் டச் போன்று தான் வேலை செய்கின்றது. 3டி டச் மூலம் பீக் மற்றும் பாப் என இரு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் படி பீக் குறிப்பிட்ட அம்சத்தினை தெளிவாக பார்க்கவும், பாப் அம்சம் புதிய மெனுவையும் குறிப்பிடுகின்றது.

ஐசைட் கேமரா

ஐசைட் கேமரா

ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளிலும் 12 எம்பி ஐசைட் ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 12 எம்பி ப்ரைமரி கேமராவானது 50 சதவீதம் கூடுதல் பிக்சல்களை ஒவ்வொரு புகைப்படத்திலும் வழங்குகின்றது, இதனால் புகைப்படம் மேலும் அழகாக காட்சியளிக்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

புதிய ஐபோன் 6எஸ் கருவியில் 4.7 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சிறிய டிஸ்ப்ளே கைககளில் கச்சிதமாக பொருந்துவதோடு புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக துல்லியமாகவும் காண்பிக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

புதிய ஐபோன் 6எஸ் கருவி முந்தைய ஐபோன்களை விட 70 சதவீதம் வேகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள ஏ9 பிராசஸர் வேகமாக இயங்குவதோடு அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

இரு ஐபோன்களும் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன் கொண்டிருப்பதோடு இவைகளில் ஆரப்பிள் வழக்கத்தின் படி மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

லைவ் போட்டோ

லைவ் போட்டோ

புதிய ஐபோன் கருவிகளில் வழங்கப்பட்டிருக்கும் லைவ் போட்டோ அம்சமானது புகைப்படம் எடுக்கப்படுவதற்கு 1.5 நொடிகள் முன்பும், பின்னரும் பதிவு செய்து கொள்ளும், இதனால் நீங்கள் பதிவு செய்த புகைப்படங்களில் சிறிய அளவிலான அசைவுகளை பார்க்க முடியும்.

பேட்டரி

பேட்டரி

ஐபோன் 6எஸ் கருவியில் கழற்ற முடியாத 1715 எம்ஏஎச் பேட்டரியும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவியில் 2915 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்டிஈ பேன்டு

எல்டிஈ பேன்டு

புதிய ஐபோன் கருவிகளில் உலகம் முழுக்க சிறப்பான ரோமிங் சேவையை வழங்கும் 23 எல்டிஈ பேன்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் கருவிகளில் 23 எல்டிஈ பேன்டுகள் வழங்கப்பட்டிருக்கும் முதல் கருவிகள் ஐபோன் தான் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்து

கருத்து

முதல் நாளில் கருவிகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், ஐபோன் கருவிகளை முதல் நாளில் வாங்கும் அனுபவத்தை வேறு எதையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என தெவிக்கின்றனர்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 6s and 6s Plus India Launch. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X