டாப் கியரில் Apple நிறுவனம்.. புதிய Air மாடலுடன் மொத்தம் 4 iPhone 17 மாடல்கள்.. LIVE மற்றும் விலை விவரங்கள்!
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. அது ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸ் அறிமுக நிகழ்வு (Apple iPhone 17 Series Launch Event) ஆகும். கடந்த 7-8 மாதங்களாக ஐபோன் 17 சீரிஸ் குறித்து நமக்கு கிடைத்த எல்லா வகையான லீக்ஸ்கள் மற்றும் வதந்திகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என எல்லாமே - இன்று முடிவுக்கு வரவவுள்ளன; வெளிச்சத்திற்கு வரவுள்ளன!
ஆவ் ட்ராப்பிங் (Awe Dropping) என்று அழைக்கப்படும் ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இந்த சீரிஸின் கீழ் வரும் புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மாடல் மீது தான் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன (Photo Source: Apple Hub).

ஐபோன் 17 சீரிஸ் உடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11) தொடங்கி புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ தேர்ட் ஜெனெரேசன் டிடபுள்யூஎஸ் ஹெட்செட் (AirPods Pro 3rd Generation TWS Headset) வரை பல்வேறு பிரிவுகளில் இன்னும் பல தயாரிப்புகள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ஐஓஎஸ் 26 (iOS 26), ஐபேட்ஓஎஸ் 26 (iPadOS 26) மற்றும் தகுதியான டிவைஸ்களுக்கான பிற ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்களுக்கான வெளியீட்டு தேதிகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் ஆவ் ட்ராப்பிங் வெளியீட்டு நிகழ்வு எப்போது தொடங்கும், இதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?
ஐபோன் 17 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 9 ஆம் தேதி) இரவு 10.30 மணிக்கு முக்கிய உரையுடன் (கீ நோட் உடன்) தொடங்கும். கடந்த கால ஐபோன் வெளியீட்டு நிகழ்வுகளை போலவே ஆவ் ட்ராப்பிங் நிகழ்வும் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும்.
இந்த வெளியீட்டு நிகழ்வு ஆப்பிளின் வலைத்தளத்திலும் அதன் யூட்யூப் (YouTube) சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் கிடைக்கும் ஆப்பிள் டிவி ஆப் வழியாகவும் இந்த நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
வரும் முன்பே ஐபோன் 17 சீரிஸ்-க்கு வரவேற்பு: டேட்டா பகுப்பாய்வு நிறுவனமான டிரெண்ட் ஃபோர்ஸ் (TrendForce) ஆனது கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) உடன் ஒப்பிடும்போது, வருகிற செப்.9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மொத்த ஏற்றுமதி 3.5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
எதிர்பார்க்கப்படியே ஐபோன் 17 சீரிஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகும்: ஐபோன் 17, ஐபோன் 17 ஏர் ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ். மேலும் இந்த மாடல்களில் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய 3 மாடல்களுமே 12ஜிபி ரேம்-ஐ (12GB RAM) கொண்ட முதல் ஐபோன்களாக இருக்கும் என்றும் டிரெண்ட் ஃபோர்ஸ் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
விலையை பொறுத்தவரை ஐபோன் 17 மாடலின் அமெரிக்க விலை $799 முதல் தொடங்கலாம். ஐபோன் 17 ஏர் மாடலின் விலை $1099 முதல் தொடங்கலாம்; ஐபோன் 17 ப்ரோ மாடலின் விலை $1199 முதல் தொடங்கலாம் மற்றும் கடைசியாக உள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை $1299 முதல் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications