Home
News

வாத்தியாரே.. பர்ஸ்ட் சம்பவம்.. வாழ்த்துக்கள்.. iPhone பேட்டரி சிக்கலுக்கு புதிய தீர்வு.. Apple ஆல் செட்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தை பார்த்து "வாத்தியாரே.. பர்ஸ்ட் சம்பவம்.. வாழ்த்துக்கள்!" என்று கூறும்படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் "ஐபோன் பேட்டரி" தொடர்பான "ஒரு விஷயத்தை" முதல் முறையாக செய்யவுள்ளது. என்னது அது?

வரவிருக்கும் ஐபோன் 17 சீரீஸின் (iPhone 17 Series) டாப் எண்ட் மாடலான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் (iPhone 17 Pro Max) முன்னதாக அறிமுகமான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் (iPhone 16 Pro Max) இருப்பதை விட பெரிய பேட்டரி கெப்பாசிட்டி (Bigger Battery Capacity) இடம்பெறலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

iPhone பேட்டரி சிக்கலுக்கு வருகிறது புதிய தீர்வு.. Apple ஆல் செட்!

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், டிப்ஸ்டர் இன்ஸ்டன்ட் டிஜிட்டல் (Instant Digital) பகிர்ந்துள்ள தகவல்கள் - ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பேட்டரி அளவு பற்றிய விவரங்களை பரிந்துரைக்கிறது. டிப்ஸ்டர் இன்ஸ்டன்ட் டிஜிட்டலின் கூற்றுப்படி இந்த மாடலில் 5000mAh வரையிலான பேட்டரி பேக் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் இப்படி செய்வது (இவ்வளவு பெரிய பேட்டரியை வழங்குவது) முதல் முறையாக இருக்கும்!

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 4676mAh பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது (அறியாதோர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒருபோதும் அதன் ஐபோன்களில் உள்ள பேட்டரி கெப்பாசிட்டியை துல்லியமாக குறிப்பிடாது: மாறாக இவ்வளவு மணி நேரம் நீடிக்கும் என்கிற பேட்டரி லைஃப் குறித்த விவரங்களை மட்டுமே அறிவிக்கும்).

அப்படியாக ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 33 மணிநேரம் வீடியோ பிளேபேக்கையும், 105 மணிநேரம் ஆடியோ பிளேபேக்கையும் வழங்க முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. ஆக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள பேட்டரி நிச்சயம் இதைவிட அதிக பேட்டரி லைப்பை வழங்கலாம்.

இதற்கு முன்பாக, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ப்ரோ மாடலில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (Vapor chamber cooling system) சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. லீக்கர் மஜின் பு (Leaker Majin Bu) பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தின்படி, கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் உள்ள உள்ள வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆனது ஐபோன்களுக்கும் வருவதாக பரிந்துரைத்தது.

iPhone பேட்டரி சிக்கலுக்கு வருகிறது புதிய தீர்வு.. Apple ஆல் செட்!

வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆனது - கடந்த பல ஆண்டுகளாக - அனைத்து ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும், பெரும்பாலான மிட்-ரேன்ஜ் போன்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் தெர்மல் சொல்யூஷன் (Thermal Solution) ஆகும். இது கேமிங் (Gaming), ஏஐ (AI) மற்றும் இதே போன்ற ரிசோர்ஸ்-இன்டென்சிவ் பணிகளின் (Resource-intensive tasks) வளர்ந்து வரும் தேவைகளை , மிகவும் திறமையான முறையில் கையாள உதவுகிறது.

இந்த வகையான தெர்மல் சொல்யூஷன் ஆனது - ப்லுயிட் எவாப்பரேஷன் (Fluid evaporation) மற்றும் கண்டென்ஸேஷனை (Condensation) பயன்படுத்தி முக்கிய கூறுகளிலிருந்து சேஸுக்கு வெப்பத்தை விரைவாக நகர்த்துகிறது. ஆப்பிளின் தற்போதைய ஐபோன்களில் உள்ள காப்பர் ஹீட் ஸ்ப்ரெடர்கள் (Copper heat spreaders) மற்றும் கிராஃபைட் ஷீட்களை (Graphite sheets) விட இது கணிசமாக திறமையானது.

இருப்பினும் ஐபோன் 17 சீரிஸில் உள்ள நான்-ப்ரோ மாடல்களில் விசி கூலிங்கை எதிர்பார்க்க முடியாது. அதாவது ஐபோன் 17, ஐபோன் 17 பிளஸ் அல்லது புதிய ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்கள் தொடர்ந்து காப்பர் ஹீட் ஸ்ப்ரெடர்கள் மற்றும் கிராஃபைட் ஷீட்களை தான் நம்பியிருக்கும். இந்த லீக் உண்மையா அல்லது வெறும் யூகம்தானா என்பதை செப்டம்பர் 2025 வாக்கில் நடக்கும் ஐபோன் 17 சீரிஸின் அறிமுகத்தின் போது தெரிந்து கொள்வோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 17 Pro Max May Get 5000mAh Battery Capacity Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X