iPhone 16 இன்று அறிமுகம்.. Apple-ன் Its Glowtime Event-ஐ LIVE ஆக பார்ப்பது எப்படி? 3 வழிகள் இருக்கு!
Apple iPhone 16 Launch Event LIVE: உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வு இன்று, அதாவது செப்.9 நடக்க உள்ளது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனமானது அதன் பல புதிய தயாரிப்புகளுடன் சேர்த்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிகழ்வு சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும்? இந்தியாவில் உள்ளவர்கள் இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது (நேரலையில் பார்ப்பது) எப்படி? ஐபோன் 16 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வெளியாகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:
ஆப்பிள் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வை சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும் (Apple It's Glowtime Event Timings)? ஆப்பிள் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வானது, கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் குபெர்டினோ பார்க்கில் நடைபெறவுள்ளது. இது சரியாக இந்திய நேரடி இரவு 10.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஆப்பிளின் புதிய அறிவிப்புகளை ரியல்டைமில் பெறலாம்.

ஆப்பிள் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி (Apple iPhone 16 Launch Live Streaming)? ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸின் வெளியீட்டு நிகழ்வானது 3 தளங்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய கிடைக்கும்: ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி ஆப்.
ஆப்பிள் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வில் என்னென்ன அறிமுகம் செய்யப்படும் (Apple Event Expected Launches)? இந்நிகழ்வின் முக்கிய அறிவிப்பாக ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் இருக்கும். இதன்கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்.
புதிய ஐபோன் 16 ,சீரிஸ் மாடல்களுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் சீரீஸ் 10 (Apple Watch Series 10), ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) மற்றும் ஆப்பிள் ஏர் பாட்ஸ் எஸ்இ (AirPods SE) போன்றவைகளையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் (iPhone 16 Series Price in India) எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, ஐபோன் 16 மாடல் ஆனது $799 (சுமார் ரூ. 67,100) க்கு அறிமுகம் செய்யப்படும்.
அதே சமயம் ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 (தோராயமாக ரூ. 75,500) க்கு வெளியாகும். ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது $1,099 (சுமார் ரூ. 92,300) க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது $1,199 (சுமார் ரூ. 1,00,700) க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.
மேற்கண்ட விலைகள் அமெரிக்க சந்தைக்கான விலை நிர்ணயங்கள் ஆகும். இறக்குமதி வரிகள் மற்றும் கூடுதல் செலவுகள் காரணமாக இந்திய சந்தைக்கான விலைகள் சற்றே அதிகமாக இருக்கும். எந்த அளவிற்கு அதிகமாக இருக்குமென்றால் புதிய ஐபோன் 16 சீரிஸின் விலை நிர்ணயங்கள் ஆனது "பெரும்பாலும்" கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 சீரிஸின் விலைகளுடன் ஒற்றுப்போகலாம்.
புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் ஆனது, பழைய ஐபோன் 15 சீரீஸ் உடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோவின் விலையை ரூ.5,000 ஆகவும், ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.20,000 ஆகவும் "ஏற்கனவே" உயர்த்தி விட்டதால்.. ஐபோன் 16 சீரீஸின் கீழ் வரும் மாடல்களில் பெரிய அளவிலான விலை உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக ஆப்பிள் ஐபோன் 15 மாடலை போலவே ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.80,000 க்குள்ளும், ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது ரூ.90,000 க்குள்ளும், ஐபோன் 16 ப்ரோ ஆனது ரூ.1,35,000 குள்ளும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ.1,60,000 குள்ளும் அறிமுகப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








