Home
News

iPhone 16 மீது அடேங்கப்பா OFFER.. ஏற்கனவே ரூ.7500, இப்போ ரூ.4000.. Amazon Prime Day Sale இப்போவே களை கட்டுதே!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்.. கடந்த செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 (iPhone 16) மாடல் மீது புதிய கேஷ்பேக் ஆபர் (New Cashback Offer) ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேஷ்பேக் ஆபரின் கீழ் ஆப்பிளின் நிறுவனத்தின் ஐபோன் 16 மாடலின் விலையை, எந்த பழைய ஸ்மார்ட்போனையும் எக்ஸ்சேன்ஜ் செய்யாமலேயே ரூ.70,000 க்கும் குறைவான விலைக்கு கொண்டுவர முடிகிறது. தகுதியான பேங்க் கார்டு கார்டுகளை கொண்ட வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 மீது ரூ.4,000 உடனடி கேஷ்பேக்கை (Rs.4000 Instant Cashback) பெறலாம்.

iPhone 16 மீது அடேங்கப்பா OFFER.. ஏற்கனவே ரூ.7500, இப்போ ரூ.4000!

மேலும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ஐபோன் 16 மாடலின் ஃபைனல் ப்ரைஸ்-ஐ இன்னும் குறைக்கலாம். அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் (Amazon Prime Day 2025 Sale) போது, ஐபோன் 16 மாடல் மீது இதேபோன்ற அல்லது இதைவிட சிறந்த தள்ளுபடி அல்லது சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அசல் விலையும் ஆபர் விலையும்: ஐபோன் 16 தற்போது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர்கள் மூலம் ரூ.72,400 க்கு கிடைக்கிறது. இது ஐபோன் 16 மாடலின் அறிமுக விலையான ரூ.79,900-ஐ விட (ரூ.7500) குறைவாகும். கூடுதலாக ஆக்சிஸ் வங்கி (Axis Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் கோடக் வங்கி (Kodak Bank) கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 கேஷ்பேக் சலுகையை பெறலாம். இப்படியாக ஐபோன் 16 மாடலின் விலையை ரூ.68,400 க்கு கொண்டுவர முடியும்.

முன்னரே குறிப்பிட்டபடி உங்களிடம் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால், ஐபோன் 16 மாடலை வாங்கும் போது, அதை எக்ஸ்சேன்ஜ் செய்தால் எக்ஸ்சேன்ஜ் போனஸும் (Exchange Bonus) கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் ஆனது நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து வேறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

அமேசான் பிரைம் டே 2025 விற்பனையை (Amazon Prime Day 2025 Sale Dates) பொறுத்தவரை இது அடுத்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கும் என்றும், இந்த விற்பனை ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு முடிவடையும் என்றும் அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது அனைத்து அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கும் (Amazon Prime Members) பிரத்தியேகமானதாக இருக்கும்.

iPhone 16 மீது அடேங்கப்பா OFFER.. ஏற்கனவே ரூ.7500, இப்போ ரூ.4000!

அதாவது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் அணுக கிடைக்கும் சலுகைகளை அணுக விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவை (Amazon Prime Membership Subscription) வைத்திருக்க வேண்டும். இந்த 3 நாட்களுக்கும் பல்வேறு தயாரிப்புகளுக்கு கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி தங்கள் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.

ஐபோன் 17 சீரீஸ் எப்போது அறிமுகமாகும் (iPhone 17 Series Launch Timeline)? இது 2025 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். ஆப்பிள் அதன் ஐபோன் 17 சீரீஸில் 4 மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் புத்தம் புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air). புதிய ஏர் மாடல் ஆனது பிளஸ் (Plus) மாடலுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 16 gets Rs 4000 Cashback Offer Ahead Amazon Prime Day 2025 Sale Starts July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X