Home
News

பெண்களை குறிவைக்கும் ஆப்பிள்! சைலெண்டாக iPhone 15-ல் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் சாதனமான ஐபோன் 15 (iPhone 15) சீரிஸ் மாடல் சாதனத்தை செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், சில முக்கிய தகவல்கள் லீக்காக துவங்கியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே கணிசமான சலசலப்பை உருவாக்கி வருகிறது என்றே நாம் கூறலாம். காரணம், ஐபோன் 15 பற்றிய தகவல்கள் இப்போது அடிக்கடி இணையத்தில் லீக் ஆக துவங்கியுள்ளன. இது ஐபோன் ரசிகர்களின் ஆர்வத்தையும், ஹைப்பையும் வேகவைக்க உயர்த்தி வருகிறது.

பெண்களை குறிவைக்கும் ஆப்பிள்! iPhone 15-ல் இப்படி ஒரு சமாச்சாரம்மா?

ஐபோன் 15 பற்றி சமீபத்தில் வெளியான பல கசிவுகள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது வெளியான ஒரு புதிய லீக் தகவலின் படி, வரவிருக்கும் புதிய ஐபோன் 15 சாதனம் புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை பெரும் என்று தெரிவிக்கிறது. குறிப்பாக, ஐபோன் 15 இன் அறிமுகத்தை மூலம், இந்த முறை ஆப்பிள் நிறுவனம் பெண்களை தனியாக குறிவைப்பது போல் தெரிகிறது.

காரணம், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் வரிசையில், நிச்சயமாக இம்முறை மிகவும் சுவாரசியமான நிறங்களில் ஒன்றாக பிங்க் நிறம் கொண்ட ஐபோன் 15 சாதனங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. பார்ப்பதற்கு காட்டன் கேண்டி (Cotton candy) போன்ற நிறத்தை இந்த புதிய ஐபோன் 15 மாடல் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறம் யாரை கவர்கிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக இளம் பெண்களையும், பிங்க் நிற பிரியர்களை நிச்சயமாக கவர்ந்திழுக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இது பல பெண்களின் இதயங்களை திருட போகிறது என்று இப்போதே டெக் வட்டார தகவல் தெரிவிக்கிறது. உலகளவில், 51% ஐபோன் பயனர்கள் பெண்கள் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

பெண்களை குறிவைக்கும் ஆப்பிள்! iPhone 15-ல் இப்படி ஒரு சமாச்சாரம்மா?

அட, ஆமாங்க.. இது தான் உண்மை. 49% ஆண்கள் மட்டுமே ஐபோன் பயன்படுத்துகிறார்களாம். ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை பெண் வாடிக்கையாளர்கள் தான் அதிகம் என்பதனால், இம்முறை அவர்களை குறிவைத்து, நிறுவனம் அசத்தாலான பிங்க் நிறத்தில் ஒரு ஐபோன் 15 வேரியண்ட்டை வெளியிடவுள்ளது என்று கூறப்படுகிறது. இதுதவிர, நிறுவனம் ப்ளூ (Blue) மற்றும் டார்க் ரெட் (Dark Red) நிறங்களில் வரும்.

ஆனால் கடந்த காலத்தில் ஆப்பிள் தகவலை துல்லியமாக கசியவிட்ட ஷ்ரிம்ப்ஆப்பிள்ப்ரோ (ShrimpApplePro) படி, iPhone 15 மிட்நைட் பிளாக் (Midnight Black), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் ப்ரொடக்ட் ரெட் (Product Red) ஆகியவற்றுடன் கூடுதலாக க்ரீன் (Green), மஞ்சள் (Yellow) மற்றும் பிங்க் (Pink) நிறத்தில் இந்த ஐபோன் 15 வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் 15 மிகவும் ஒல்லியான பெசல்களைக் (Slim Bessels) கொண்டதாகத் தெரிகிறது. அதேபோல், ஐபோன் 15 சீரிஸ் இல் உள்ள நான்கு மாடல்களிலும் டைனமிக் ஐலேண்டிற்கான கட்அவுட்கள் (Dynamic Island) இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாடலில் இது iPhone 14 Pro மற்றும் iPhone Pro Max சாதனத்தில் மட்டுமே காணப்பட்ட ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, மற்றொரு ட்விட்டர் லீக்கர், வெளியிட்ட தகவலின் படி, ஆப்பிள் ஐபோன் 15 ஸ்டாக்டு பேட்டரி (Stacked Battery) வடிவமைப்பை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது ஆப்பிள் ஐபோன் 15 சாதனத்திற்கான பேட்டரி திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், 40W வயர்டு & 20W மாக்ஃசேப் (MagSafe) சார்ஜிங் பேச்சும் அடிபடுகிறது. ஆனால் இது iPhone 16 இல் வெளிவர அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 15 Rumoured With Exciting Pink Colour Variants and New Features Await
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X