iPhone 15 Pro-வில் இத்தனை புது மாற்றங்களா? அம்மாடி இது ரொம்ப தூக்கலால இருக்கு.!
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புது வரவான iPhone 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், iPhone 15 Pro பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. டிசைன் பற்றிய முக்கியமான தகவல் இது.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த iPhone 15 தொடர் மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாகவிருக்கிறது. இன்னும் வெறும் 4 மாதங்கள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், வரவிருக்கும் iPhone 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய தகவலல்கள் ஆங்காங்கே இணையத்தில் தென்பட துவங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான iPhone 15 தொடர்பான தகவலில் iPhone 15 Pro மாடலின் பெயர் அடிபட்டுள்ளது.

ஆம், வரப்போகும் iPhone 15 Pro ஸ்மார்ட்போனின் ரெண்டர் தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுவரை யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய மாற்றத்தை நிறுவனம் iPhone 15 Pro மாடலில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. iPhone 14 Pro மாடலில் மேற்கொள்ளாத சில மாற்றங்களை நிறுவனம் iPhone 15 Pro மாடலில் களமிறங்கியுள்ளது போல் தெரிகிறது.
iPhone 15 Pro போனில் டைட்டானியம் சேசிஸ், அடர்த்தியான மற்றும் புதுமையான கேமரா மாட்யூல் மற்றும் ஸ்லிம்மான பெசல் வடிவமைப்பை பெரும் என்று ரெண்டர் தகவல் குறிப்பிடுகிறது. இதற்கு தொடர்புடைய சில புகைப்படங்களையும் 9To5Mac தளம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கையில், விஷயம் தெளிவாக புரிகிறது. ஆப்பிளின் வழக்கத்தை விட கேமரா தொகுதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
iPhone 15 Pro மாடலில் கேமரா மாட்யூல் சற்றே அடர்த்தியான தோற்றத்தை பெற்று தனியாக தூக்கலாக தெரிகிறது. அதேபோல், இந்த iPhone 15 Pro மாடல் போன்களில் இனி பிஸிக்கல் பட்டன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. பிஸிக்கல் பட்டன்களை நிறுவனம் நீக்கிவிட்டது. இதற்கு பதிலாக சாலிட் ஸ்டேட் ஹெப்டிக் பட்டனை iPhone 15 Pro மற்றும் மற்ற மாடல்களிலும் நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் 7 மற்றும் 8 சீரிஸ் மாடல்களில் காணப்பட்ட ஹோம் பட்டன்கள் தான் ஹெப்டிக் பட்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. iPhone 15 Pro போனில் மியூட் பட்டன் இனி புஷ் பட்டன் ஆக இல்லாமல், சாலிட் ஸ்டேட் பட்டனாக மாற்றப்படுகிறது. இதை விட மிகப்பெரிய மாற்றமாக iPhone 15 Pro மற்றும் மற்ற iPhone 15 மாடல்களில் நிறுவனம் USB Type-C சார்ஜிங் போர்ட்களை கொண்டு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.
ஐரோப்பாவின் சட்டத்திற்கு இணங்க இந்த மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone 15 சீரிஸ் மாடல்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை கவனிக்கும் போது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 2 விதமான USB சார்ஜிங் போர்ட்களை நிறுவனம் கொண்டுவரவுள்ளது. உயர்தர பிரீமியம் மாடல்களில் நிறுவனம் USB 3.1 சார்ஜிங் போர்டையும், அதே சமயம், நார்மல் ஐபோன் 15 மாடல்களில் USB 2.0 சார்ஜிங் போர்டையும் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.
அடுத்தபடியாக, ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் புது வகையான கேமரா சென்சாரை நிறுவனம் பயன்படுத்தவுளால்தாம். அதேபோல், இந்த வரவிருக்கும் புதிய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் நியூ டீப் ரெட் என்ற புதிய வண்ண வேரியண்ட் மாடலையும் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில புதிய மாற்றங்களையும் ஐபோன் 15 சீரிஸ் பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








