ஆளே மாறிடாப்ல.. ஆப்பிள் iPhone 15 Pro-வின் டிசைன் மற்றும் அம்சங்கள்!
ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸ் வருகிற செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு இன்னும் முழுதாக 4 மாதங்களுக்கு மேல் இருக்கிறது என்றாலும் கூட, வழக்கம் போல இம்முறையும் வரவிருக்கும் ஐபோன்கள் எப்படி இருக்கும், என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல்கள் வெள்ளம் போல வந்த வண்ணம் உள்ளன.
அப்படியாக சமீபத்தில் 9டூ5மேக் (9to5Mac) வழியாக வரவிருக்கும் ஐபோன் 15 ப்ரோவின் டிசைன், கேமராக்கள், பட்டன்ஸ் மற்றும் டிஸ்பிளே தொடர்பான சில ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வெளியானது. அதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவில் என்ன மாதிரியான வடிவமைப்பு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய 6 முக்கியமான புள்ளிகள் இதோ:

01. டைட்டானியம் ஃப்ரேம்: ஐபோன் 15 சீரீஸில் உள்ள ப்ரோ மாடல்கள் டைட்டானியம் கேஸிங் (Titanium casing) மற்றும் வட்டமான விளிம்புகளை (Rounded Edges) கொண்டிருக்கலாம். ஏனென்றால், தற்போதைய ஐபோன் மாடல்களில் உள்ள கூர்மையான விளிம்புகள் குறித்து பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் உண்மையிலேயே ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் வட்டமான விளிம்புகளை வழங்கினால், அது ஐபோன்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வேகமாக நிகழ்த்தப்பட்ட வடிவமைப்பு மேம்படுத்தல்களில் ஒன்றாக இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறும்.
02. கேமரா பம்ப் தடிமனாக மாறக்கூடும்: ஆப்பிள் அதன் ஐபோன் 15 ப்ரோவில் உள்ள கேமராக்களின் அளவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐபோன் 15 ப்ரோவின் கேமரா பம்ப் சற்றே தடிமனாக இருக்க வாய்ப்புள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐபோன் 14 ப்ரோவுடன் ஒப்பிடும் போது தனிப்பட்ட லென்ஸ் புரோட்ரூஷன் இருமடங்காக அதிகரிக்கலாம்.
03. யூஎஸ்பி-சி சார்ஜிங்: ஐபோன் 15 சீரிஸின் அனைத்து ஐபோன் மாடல்களும் யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட்டுடன் வர வாய்ப்புள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, ரிப்பட் டெக்ஷ்ர் மற்றும் மெட்டல் சரவுண்டட் உடன் வரலாம். மேலும் இந்த யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட்டின் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்பிஸ்ட் ஆனது வழக்கத்தை விட குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
04. ஹப்டிக் ஃபீட்பேக் உடன் வால்யூம் மற்றும் மியூட் பட்டன்ஸ்: ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் சாலிட்-ஸ்டேட் ஹாப்டிக் வால்யூம் மற்றும் ம்யூட் பட்டன்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வால்யூம் மற்றும் மியூட் பட்டன்களை அழுத்தும் போது அது சிறப்பாக செயல்பட இரண்டு புதிய ஹாப்டிக் என்ஜின்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
05. மெல்லிய பெஸல்கள்: ஐபோன் 15 ப்ரோவின் பெஸல்கள் அதன் முன்னோடிகளை விட மெல்லியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அளவீட்டில் அவைகள் 1.55 மிமீ இருக்கலாம். மேலும் முன் மற்றும் பின்பக்க கிளாஸின் விளிம்புகளில் கர்வ்டு டிசைனை கொண்டிருக்கலாம்.
06. புதிய கலர் ஆப்ஷன்ஸ்: வரவிருக்கும் ஐபோன் 15 ப்ரோ மாடலானது 410D0D-யின் கலர் கோட்-ஐ கொண்ட அடர் சிவப்பு வண்ணத்தில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் இந்த சிக்னேச்சர் கலரை தவிர, ப்ரோ மாடலுக்கான மற்ற வண்ண விருப்பங்களில் ஒயிட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் கோல்ட் ஆகியவைகளும் அடங்கும். புதிய அடர் சிவப்பு வேரியண்ட் ஆனது டீப் பர்பிள் வேரியண்ட்டை ரீப்ளேஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications