Home
News

சொன்னால் நம்பமாட்டீங்க.. iPhone 15 Pro போன் 5x பெரிஸ்கோப் கேமராவுடன் வெளிவருகிறதா? புதிய ரிப்போர்ட்..

ஆப்பிள் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது காரணம், ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 14 பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்குக் கூடுதல் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் வரிசை பற்றிய வதந்திகள் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இப்போது புதிதாக நம்ப முடியாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ பற்றிய புதிய ரிப்போர்ட்

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ பற்றிய புதிய ரிப்போர்ட்

இதன் படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான மாடலில் உள்ள கேமரா அமைப்பில் வழங்கப்படும் ஒரு முக்கியமான கேமராவில் 5x டெலிஃபோட்டோ லென்ஸ்களின் முன்மாதிரிகள் மற்றும் மாதிரிகளை ஆப்பிள் சோதித்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் உற்பத்தியாளர் யார் என்பது குறித்த இறுதி முடிவு தகவல் வரும் மே 2022 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய 9to5Mac இன் அறிக்கையின்படி, iPhone 15 Pro பற்றிய தகவல்கள் ஆய்வாளர் ஜெஃப் புவிடமிருந்து வந்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14 தொடர் பற்றிய தகவல்

ஆப்பிள் ஐபோன் 14 தொடர் பற்றிய தகவல்

ஆப்பிள் நிறுவனம் அதன் வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 தொடர் பற்றிய தகவல்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 14 பல புதிய மேம்பாடுகளுடன், வடிவமைப்பிலும் சில மாற்றங்களைப் பெறுகிறது என்று சமீபத்திய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் ஐபோன் 13 தொடரின் வாரிசாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த மாடல் ஐபோனில் இந்த புதிய அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம்?

எந்த மாடல் ஐபோனில் இந்த புதிய அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம்?

இப்போது வெளியான அறிக்கையின் படி, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max போன்களின் கூறுகள் அங்கீகரிக்கப்பட்டால், அவை " வரும் 2023 ஆண்டில் வெளியாகும் ஐபோன் வரிசையின் உயர்நிலை மாடல்களில்" சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max மாடல்களின் சேர்க்கப்படும். லென்ஸின் தயாரிப்பாளர் லான்டே ஆப்டிக்ஸ் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் இந்நிறுவனம் 100 மில்லியன் யூனிட்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஸ்மார்ட்போன் சந்தைக்குப் புதிதல்ல என்றாலும் ஆப்பிளுக்குப் புதிது தான்

இது ஸ்மார்ட்போன் சந்தைக்குப் புதிதல்ல என்றாலும் ஆப்பிளுக்குப் புதிது தான்

உண்மையைச் சொல்லப் போனால், பெரிஸ்கோப் லென்ஸ்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் புதியவை அல்ல, மேலும் இவை சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை நீளமான டெலிஃபோட்டோ கேமராக்களின் ஒளியியல் அசெம்பிளியை கிடைமட்டமாக வைக்க அனுமதிக்கின்றன. இதனால் நவீன மெலிதான தொலைப்பேசிகளில் இது கச்சிதமாகப் பொருந்தும். ஆண்ட்ராய்டு போன்கள் பல ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டாலும், ஆப்பிள் பாரம்பரியமாக ஒரு அம்சத்தைச் செயல்படுத்துவதற்கு முன் அதை முழுமையாக்கச் சோதிக்க முயல்கிறது.

சிறந்த ஐபோனாக உருவாகும் ஐபோன் 15 சீரிஸ்

சிறந்த ஐபோனாக உருவாகும் ஐபோன் 15 சீரிஸ்

இதனால், அடுத்து வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகத்திற்குப் பிறகு வெளிவரத் தயாராகும் அடுத்த தலைமுறை ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் போன்களில் 5x பெரிஸ்கோப் அம்சத்துடன் கூடிய கேமரா அம்சத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்பது சிறப்பான விஷயம். ஆப்பிள் ஐபோன்களின் தற்போதைய கேமரா அம்சம் ஒரு முழு திரைப்படம் எடுக்கும் அளவிற்குச் சிறப்பாக இருக்கிறது. இதை நிறுவனம் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல தயராகிவிட்டது. அதற்கான வேலைகளைச் சோதனை செய்வதில் துவங்கி ஆப்பிள் நிறுவனம் மும்முரமாக இப்போதே ஐபோன் 15 சிறந்த ஐபோனாக உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆப்பிள் ஐபோனில் பிஸிக்கல் சிம் கார்டு ஸ்லாட் இருக்காதா?

ஆப்பிள் ஐபோனில் பிஸிக்கல் சிம் கார்டு ஸ்லாட் இருக்காதா?

அதேபோல், சமீபத்தில் இதற்கு முன்னர் வெளியான தகவலின் படி, வரப்போகும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் பிஸிக்கல் சிம் கார்டு ஸ்லாட்டுகள் (Physical Sim Card Slots) இல்லாமல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிளாக்டோய்போனில் இருந்த ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இப்போது, ​​வெளியான மற்றொரு அறிக்கையின்படி, (மேக்ரூமர்ஸ் வழியாக), ஐபோன் 14 சீரிஸ் சாதனங்களிலிருந்தே பிஸிக்கல் சிம் கார்டு ஸ்லாட்டுகளை அகற்ற ஆப்பிள் திட்டமிடுவது போல் தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இ-சிம் ஆதரவுடன் மட்டும் செயல்பட ஆப்பிள் முடிவா?

இ-சிம் ஆதரவுடன் மட்டும் செயல்பட ஆப்பிள் முடிவா?

குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இ-சிம் மட்டுமே ஸ்மார்ட்போன்களுக்கு தயாராக இருக்குமாறு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் கூட பிஸிக்கல் சிம் ஸ்லாட்டுகள் இல்லாமல் விரைவில் வரலாம் என்று பரிந்துரைக்கிறது. அறிக்கை தகவலின் படி, சில அமெரிக்க கேரியர்கள் ஐபோன் 13 தொடர் சாதனங்களை 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து இ-சிம் ஆதரவுடன் மட்டுமே மாற்றுவதற்குத் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 15 Pro Could Come With 5x Periscope Camera Feature : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X