இப்பவே அடிச்சிக்க ஆளில்ல! இதுல கேமரா அப்கிரேட் வேற! Apple 15 சீரிஸ் வாங்குனா லைப் டைம் செட்டில்மெண்ட்!
ஆப்பிள் (Apple) ஐபோன்களின் கேமராவை அடிச்சிக்கவே, வேறு மாடல்கள் இல்லாமல் இருக்கும் வேளையில், ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடல்களில் பிரம்மாண்ட கேமரா அப்கிரேட் வரவிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மேலும் 2 அப்கிரேட்ஸ் இருக்கிறது.
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை செப்டம்பர் மாதம் வெளியிட இருக்கிறது. இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் இல்லாத பல அம்சங்கள் ஐபோன் 15 சீரிஸ் போன்களில் இருக்கும் என்று அவ்வப்போது வெளியாகும் செய்திகள் வெளிச்சம்போட்டு காட்டிவருகின்றன.

இப்போது மூன்று மாஸான அப்கிரேட்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் வரவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில், கேமரா (Camera), சார்ஜிங் போர்ட் (Charging Port) மற்றும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சம் ஆகிவற்றின் பெயர் அடிபடுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
டைனமிக் ஐலேண்ட் அம்சம் (Dynamic Island Feature): ஆப்பிளின் எல்லா போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வருவது கிடையாது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்களில் மட்டுமே வருகிறது. இது செல்பீ கேமராவை சுற்றிய டிஸ்பிளே பிக்சல்களை பில்-ஷேப்ட் (Pill-Shaped) வடிவில் கவர் செய்திருக்கும். இந்த பில்-ஷேப்ட் டிசைன் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்றவாறு அளிவில் மாறிக்கொள்ளும்.

இந்த அம்சம் ஐபோன் பிரியர்களை மட்டுமல்லாமல், மற்ற போன்களின் பிரியர்களையும் கவர்ந்துள்ளது. இதனால், பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை அறிமுகம் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அம்சத்தை ஐபோன் 15 சீரிஸ் போன்களிலும் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
48 எம்பி கேமரா அப்கிரேட்: இப்போது வரையில் ஆப்பிள் போன்களின் கேமராவுக்கு நிகரான கிளாரிட்டி கொண்ட மற்றொரு நிறுவனத்தின் போன் வெளியாகவில்லை. சாம்சங் போன்கள் கூட ஆப்பிளுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளன. அந்த அளவுக்கு தொடர்ந்து கேமரா அம்சத்தில் ஆப்பிள் போன்கள் முதலிடத்திலேயே இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் போன்களின் அதிகபட்ச மெகா பிக்சல்கள் 48 எம்பி மட்டுமே.
இதுவே வேற லெவலில் இருக்கும். ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போனில் மட்டுமே 48 எம்பி கேமரா வருகிறது. இன்றைய தேதியில், இந்த போன் மட்டுமே கேமராவில் உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. இப்போது வரும் ஐபோன் 15 சீரிஸ் போன்களிலும் 48 எம்பி கேமரா வருகிறது. இதில் அப்டிகல் ஜூமிங் கொண்ட பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lenses) இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைப் சி போர்ட் அப்கிரேட்: ஆப்பிள் போன்களில் பெரும்பாலும் லைட்னிங் சார்ஜிங் போர்ட்களே இடம்பெற்றிருக்கும். இதற்கு பெரிய அதிருப்தி இல்லையென்றாலும், டைப் சி போர்ட் கேபிள்களுக்கு ஆப்பிள் பிரியர்களிடையே வரவேற்பு இருக்கிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்த போன்களில் யுஎஸ்பி டைப்-சி போர்ட்களை (USB Type-C) பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அந்த வரிசையில், ஐபோன் 15 சீரிஸ் போன்களில் யுஎஸ்பி டைப்-சி போர்ட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications