iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

|

அந்தா வந்துடுச்சு, இல்ல-இல்ல இந்த வந்துடுச்சு, இப்போ ரொம்ப கிட்ட வந்துடுச்சு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று பல மாதங்களாக ஆப்பிள் ரசிகர்களை எதிர்பார்ப்பின் விளிம்பிற்கே கொண்டு சென்ற அந்த ஒரு முக்கியமான நாள் இப்போது அதிகாரப்பூர்வமாக நெருங்கி வந்துவிட்டது. ஆம், ஆப்பிள் iPhone 14 டிவைஸிற்கான அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

iPhone 14 சீரிஸ் அறிமுக தேதி உறுதியானது

iPhone 14 சீரிஸ் அறிமுக தேதி உறுதியானது

iPhone 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் எப்போது, எப்போது என்று எதிர்பார்த்துக் காத்திருந்த கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இப்போது மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இப்போது ஐபோன் 14 அறிமுகத்திற்கான தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபோன் 13 மாடலை தொடர்ந்து இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் ஐபோன் 14 மாடல்கள் வரும் செப்டம்பர் 7ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று Apple கூறியுள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள் "Far Out" ஈவென்ட்

இந்த அறிமுக நிகழ்வை இந்த முறை நிறுவனம் "Far Out" என்ற டேக்லைன் பெயருடன் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய "Far Out" நிகழ்விற்கான காஸ்மிக் ஆப்பிள் லோகோவையும் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டிற்கான ஐபோன் 14 அறிமுக நிகழ்வு நேரடியாக மக்கள் மத்தியில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பிற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து நிறுவனம் நேரடியாக அறிமுகம் செய்யும் நிகழ்வாக இது இருக்கப் போகிறது.

iPhone 14 சீரிஸ் வரிசையில் இந்த மாடல் இருக்காதா?

iPhone 14 சீரிஸ் வரிசையில் இந்த மாடல் இருக்காதா?

இந்த அறிமுகம் நிகழ்வில் iPhone 14 சீரிஸ் வரிசையில் குறைந்தது 3 மாடல்களாவது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த ஆண்டு iPhone 14 சீரிஸ் வரிசையில் மினி ஐபோன் மாடல் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 Mini மாடல் போதிய அளவு விற்பனை ஆகாததால் நிறுவனம் இந்த முறை மினி மாடலை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்திய ரசிகர்கள் இந்த ஈவென்ட்டை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

இந்திய ரசிகர்கள் இந்த ஈவென்ட்டை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

இந்த புதிய iPhone 14 வெளியீட்டு நிகழ்வு செப்டம்பர் 7, 2022 அன்று காலை 10 PT மணி படி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இது இரவு 10:30 மணிக்குத் தொடங்கும். Apple TV ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்தியேகமான YouTube சேனல் வழியாக இந்த வெளியீட்டு நிகழ்வை நீங்கள் லைவாக பார்க்க முடியும். இப்போது உங்கள் காலெண்டரில் இந்த தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஐபோன் 14 தொடரில் எத்தனை மாடல்கள்? என்ன டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படும்?

ஐபோன் 14 தொடரில் எத்தனை மாடல்கள்? என்ன டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படும்?

வதந்திகளின் படி, ஐபோன் 14 தொடரில் ஐபோன் 14 மாடல் 6.1 இன்ச் டிஸ்பிளே உடனும், ஐபோன் 14 மேக்ஸ் மாடல் 6.7 இன்ச், ஐபோன் 14 ப்ரோ மாடல் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குபெர்டினோ நிறுவனமானது இந்த ஆண்டு மினி மாடலை வெளியிடாது. இது கம்மி விலையில் ஐபோன் அனுபவத்தை மகிழ்ந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.

இந்த ஆண்டு நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஆப்பிள் இறுதியாக ப்ரோ மாடல்களில் மட்டுமாவது நாட்ச் அம்சத்தை இம்முறை அகற்றும் என்று கூறப்படுகிறது. இது செல்ஃபி கேமராவிற்கான மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்களுக்கான டேப் வடிவ கட்அவுட் மாடலை பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவில் மாற்றும். அதேபோல், இந்த புதிய மாடலில் புத்தம் புதிய ஆப்பிள் சிலிக்கான், மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு மற்றும் பெரிய பேட்டரிகள் உட்படப் பல மேம்படுத்தல்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 14 உடன் இந்த சாதனங்களும் அறிமுகம் செய்யப்படுமா?

ஐபோன் 14 உடன் இந்த சாதனங்களும் அறிமுகம் செய்யப்படுமா?

ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை தவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றையும் ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யும். இத்துடன், புதிய AirPods Pro மற்றும் iPad மாடல்களையும் நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் உள்ள ஆப்பிள் ரசிகர்களும் ஐபோன் 14 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு பழைய ஐபோன் 13 மற்ற பிற மாடல்களின் விலை வீழ்ச்சியடையும் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 Series Launch Event Far Out Sets For September 7th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X