iPhone 14 சீரீஸ் அறிமுக தேதி லீக் ஆனது; விலையில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும்!

|

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்கள் வந்தால் போதும், அதற்கு முந்தைய ஆண்டு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் மாடல்களின் மீது "தாறுமாறான" ஆபர்கள் அறிவிக்கப்படும்.

அதை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்!

அதை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்!

அதை வைத்தே நாம் அடுத்த சில மாதங்களில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய மாடல்கள் மீதான ஆபர்கள் ஒருபக்கம் இருக்க - மறுகையில் - வரவிருக்கும் லேட்டஸ்ட் ஐபோன்கள் பற்றிய லீக்ஸ் (எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், வடிவமைப்பு குறித்த) தகவல்களும் வந்து குவியும்.

அப்படியாக, அறிமுக தேதி லீக் ஆகி உள்ளது!

அப்படியாக, அறிமுக தேதி லீக் ஆகி உள்ளது!

டிப்ஸ்டர் iHacktu ileaks வழியாக கிடைத்துள்ள ஒரு லீக் தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் தனது 'நெக்ஸ்ட் ஜெனரேஷன்' ஐபோன் 14 சீரீஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யலாம்.

மேலும் ஐபோன் 14 சீரீஸின் ப்ரீ-ஆர்டர்களை பொறுத்தவரை, அது செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேற்குறிப்பிட்ட தேதிகள் அனைத்துமே ஆப்பிள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அவைகளை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?

வழக்கம் போல 4 மாடல்களாக அல்லது 5-ஆ?

வழக்கம் போல 4 மாடல்களாக அல்லது 5-ஆ?

இம்முறை ஐபோன் மினி மாடல் வெளியாகாது. ஏனெனில் இது, நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ சீரீஸின் (iPhone SE Series) விற்பனையை கடுமையாக பாதித்ததாக ஆய்வாளர்கள் பரிந்துரைத்ததை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் நிறுவனம் 'மினி' மாடல்களை அறிமுகம் செய்வதை "புறக்கணித்துள்ளது".

எனவே, ஐபோன் 14 சீரீஸின் கீழ் - வழக்கம் போல - மொத்தம் 4 மாடல்களே அறிமுகம் செய்யப்படும். அவைகள் ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 மேக்ஸ் (iPhone 14 Max), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஆகும்.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

இதுவரை வெளியான அறிக்கைகளைப் பொருத்தவரை, iPhone 13 சீரீஸ் உடன் ஒப்பிடும் போது, ​​iPhone 14 சீரீஸ் ஆனது வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் நிறைய மேம்பாடுகளைக் கொண்டுவரும். குறிப்பாக விலை நிர்ணயத்தில் நமக்கெல்லாம் ஒரு 'சர்ப்ரைஸ்' காத்திருக்காலம்.

அது என்னவென்றால், iPhone 14 மாடலின் விலை நிர்ணயம் ஆனது iPhone 13-ஐ போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ஐபோன் 14 மாடலின் பேஸிக் வேரியண்ட் ரூ.79,900-ஐ சுற்றியதொரு புள்ளியில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும், ஐபோன் 13-ஐ போலவே ஐபோன் 14 மாடலும் குறைந்தபட்சம் 128GB என்கிற ஸ்டோரேஜை வழங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். அதிகபட்சமாக 1TB வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், 1டிபி என்கிற இன்டர்னல் ஸ்டோரேஜை பெறும் முதல் ஐபோன்களாக 14 சீரீஸ் மாடல்கள் திகழும்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

மேக்ஸ், ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை?

மேக்ஸ், ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை?

வெண்ணிலா மாடலை (ஐபோன் 14) தவிர்த்து, மற்ற மாடல்களின் (iPhone 14 Max, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max) விலை விவரங்கள் குறித்து பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை.

ஆனால் கண்டிப்பாக பழைய ஐபோன் 13 சீரீஸ் மாடல்களின் விலைகளோடு ஒற்றுப்போகாது.

ப்ரோ மாடல்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!

ப்ரோ மாடல்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!

அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 14 மற்றும் 14 ப்ரோவில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறலாம், மறுகையில் உள்ள ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே பேக் செய்யப்படலாம்.

மேலும் ப்ரோ மற்றும் நான்-ப்ரோ மாடல்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையும் நாம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, ப்ரோ மாடல்கள் ஆனது நாட்ச் வடிவமைப்பை தவிர்த்துவிட்டு பஞ்ச்-ஹோல் கட்அவுட்-ஐ பெறலாம் மற்றும் லேட்டஸ்ட் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

அடுத்த ஆப்பிள் வாட்ச் எப்போது அறிமுகமாகும்?

அடுத்த ஆப்பிள் வாட்ச் எப்போது அறிமுகமாகும்?

பெரும்பாலும் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகத்தின் போதே ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸின் அறிவிப்பும் நிகழலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 series is expected to launch on September 13

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X