பாகிஸ்தானில் iPhone 14 விலை ஒரு SUV காரை விட அதிகமா? ஆத்தி! இம்புட்டு விலையா? இந்த விலைக்கு காரே வாங்கலாமே?
ஆப்பிள் ஐபோன் என்றாலே அது விலை அதிகமானது என்பதை நாம் அனைவருக்கும் அறிவோம். இந்தியாவில் புதிய ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) சீரிஸ் மாடல்களின் விலை என்ன என்பது பற்றி நமக்கு தோராயமாக ஒரு ஐடியா இருக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் இப்போது 1 லட்சம் ரூபாய் மற்றும் 1.5 லட்சம் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் எப்போதுமே அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பெயர் பெற்றது. அதன் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய மாடலாக ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் உலகளவில் விற்பனையாகிறது.

அதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் அதிநவீன அம்சங்களுடன், இது சந்தேகத்திற்கு இடமின்றி சந்தையில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. இருப்பினும், பாகிஸ்தானில் இந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் Apple iPhone 14 Pro Max விலை, ஒரு புதிய எஸ்.யு.வி கார் வாங்கும் அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
உண்மையை சொன்னால், இந்தியாவில் கிடைக்கும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலையை விட, பாகிஸ்தானில் கிடைக்கும் ஐபோனின் பிரீமியம் மாடலின் விலை SUV கற் உடன் ஒப்பிடும் அளவிற்கு நெருக்கமாகவுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் Apple iPhone 14 Pro Max இப்போது பாகிஸ்தானில் ரூ.7.21 லட்சம் என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இது இந்தியாவில் கிடைக்கும் பல சொகுசு எஸ்யூவிகளை விட விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் பாகிஸ்தானில் மட்டும் இவ்வளவு விலை என்று நீங்கள் கேட்கலாம்? நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக, ஆப்பிள் தயாரிப்புகளின் விலை நிர்ணயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதியுள்ளது. இதன் விளைவாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.7,21,000 ஆகும். அதேசமயம், ரெனால்ட் கிகர் எஸ்யூவியின் விலை ரூ.6.50 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, பாகிஸ்தானில் உள்ள ஃபிளாக்ஷிப் ஆப்பிள் ஐபோனை விட, இந்தியாவில் ஒரு எஸ்யூவியின் விலை சுமார் ரூ.70,000 குறைவு. இரு நாடுகளுக்கிடையேயான விலை நிர்ணயத்தில் இவ்வளவு குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
விலையைத் தவிர, ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் கவனிக்க வேண்டிய பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் முதல் 'நாட்ச்-லெஸ்' ஐபோன் மாடலாகும். இது Apple iPhone 13 Pro Max-ஐப் போலவே உள்ளது. இது 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் A16 பயோனிக் சிப் உடன் வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் டீப் பர்பிள், கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
முடிவில், பாகிஸ்தானில்ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் இன் விலை சந்தையில் கிடைக்கும் பல சொகுசு கார்களை விட கணிசமாக அதிகமாக உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் அதே வேளையில், அதன் விலை நிர்ணயம் நாட்டில் உள்ள பலரை அணுக முடியாததாக ஆக்கியுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், இதுபோன்ற ஆடம்பர பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








