Apple ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?- காத்திருந்து வாங்கலாமா, பட்ஜெட் தாங்குமா?
2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பிரதான ஒன்று. செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது. வெளியான முந்தைய மாடல்களை விட ஐபோன் 14 ப்ரோ அதிக விலை கொண்டதாக இருக்கும் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

ஐபோன் 14 சீரிஸ் விற்பனை எப்போது?
Gadget Tendency அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் ஆரம்பத்தில் 90 மில்லியன் யூனிட்களுடன் இதன் விற்பனை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள தகவலின்படி, iPhone 14 Pro சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட் $1,100 இல் தொடங்கும் எனவும் தோராயமாக இதன் விலை $1,099 ஆக இருக்கும் எனவும் கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட் விலை $1,200 இல் தொடங்கும் எனவும் தோராயமாக இதன் விலை $1,199 ஆக இருக்கும் எனவும் கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மேம்பாடுகளுடன் அம்சங்கள்
ஐபோன் 13 ப்ரோ ரூ.1,19,900 என ஆரம்ப விலையிலும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.1,29,900 என்ற ஆரம்ப விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் முந்தை மாடல்களை விட பெரிய மேம்பாடுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் ப்ரோ மாடல்கள் முந்தைய மாடல்களை விட $100 அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. $100 என்றாலும் இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.8000 அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பிரத்யேகமாக செல்பி கேமரா ஆதரவு
அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 சாதனத்தின் செல்பி கேமரா கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம். ஐபோன் 14 குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அந்த சாதனத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

ஆட்டோஃபோகஸ் தன்மையுடன் முன்புற கேமரா
ஐபோன் 14 கேமரா குறித்த தகவலை பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதையடுத்து ஐபோன் 14 முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும். இந்த சாதனத்தின் முன்பக்க கேமராவானது ஆட்டோஃபோகஸ் தன்மையை ஆதரிக்கும் என கூறினார்.

துல்லியமாக வீடியோக்கள் மற்றும் படங்களை பதிவு செய்யலாம்
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் தன்மையை கொண்டுவருவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தின் செல்பி கேமரா 5பிக்சல் மற்றும் f/2.2 aperture மட்டுமே கொண்டிருந்த நிலையில் ஐபோன் 14 சாதனத்தில் 6பிக்சல் லென்ஸ் மற்றும் பிரைட் f/1.9 aperture இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்தர படங்கள் மற்றும் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்யலாம். பல ஆண்டுகள் கண்டிறாத மிகப்பெரிய முன்புற கேமரா மேம்படுத்தலை இந்த ஐபோன் சாதனம் கொண்டிருக்கும் என ஆய்வாளர் குவோ தெரிவித்தார்.

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் அறிமுக நிகழ்வு
ஐபோன் 14 சாதனம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வில் ஐபோன் 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை காத்திருந்து ஐபோன் 14 நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications