புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

|

ஆப்பிள் நிறுவனம் iPhone 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஒரு புதிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், வரவிருக்கும் புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 தொடர் மாடல்களின் விலையை விட மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எது iPhone 13 ஐ விட குறைந்த விலையில் iPhone 14 கிடைக்கப் போகிறதா? உண்மையா?

புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் எப்போது அறிமுகம்?

புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் எப்போது அறிமுகம்?

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 7ம் தேதி, Apple Far Out 2022 என்ற நிகழ்வை நிகழ்த்தவுள்ளது. இந்த நிகழ்வின் போது புதிய iPhone 14 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய நேரத்தின் படி, இது செப்டம்பர் 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு லைவ் செய்யப்படும். இந்த நிகழ்வின் போது, இந்த ஆண்டிற்கான iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro and iPhone 14 Pro Max ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 13 விலையை விட குறைந்த விலையில் iPhone 14 அறிமுகமா?

iPhone 13 விலையை விட குறைந்த விலையில் iPhone 14 அறிமுகமா?

இதற்கு முன்பு வெளியான தகவலின் படி, ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் சில காரணங்களால் இந்த ஆண்டு விலை அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட் லீக் தகவல், இதை முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளது. இந்த சமீபத்திய தகவலின் படி, வரவிருக்கும் புதிய iPhone 14 தொடர் மாடல்கள், முந்தைய iPhone 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை விலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

செம குஷியில் ஆப்பிள் ரசிகர்கள்.. iPhone 14 விலை கம்மியா?

செம குஷியில் ஆப்பிள் ரசிகர்கள்.. iPhone 14 விலை கம்மியா?

இந்த தகவல் ஆப்பிள் ரசிகர்களைக் குஷி அடைய செய்துள்ளது. சரி, இந்த சமீபத்திய தகவல் என்ன பரிந்துரைக்கிறது என்று பார்க்கலாம். ஆப்பிள் ஐபோன் 14 விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. அடிப்படை iPhone 13 மாடலின் 128GB வேரியண்ட் மாடல் $799 விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த TrendForce தகவலின் படி, வரவிருக்கும் iPhone 14 மாடலின் விலை $50 குறைந்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

என்ன விலையில் iPhone 14 நாம் எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் iPhone 14 நாம் எதிர்பார்க்கலாம்?

இதன் பொருள், வரவிருக்கும் iPhone 14 மாடலின் ஆரம்ப விலை $749 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 59,600 என்ற விலை முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான தகவலின் படி, iPhone 14 மாடல்கள் $900 என்ற விலையில் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 71,700 விலை ஆகும்.

ஐபோன் 14 ப்ரோ மாடல்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்குமா?

ஐபோன் 14 ப்ரோ மாடல்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்குமா?

அதேபோல், முந்தைய வதந்திக்கு மாறாக, ஐபோன் 14 மேக்ஸ் சாதனத்தின் ஆரம்ப விலை வெறும் $849 ஆக இருக்கும் என்று இந்த தகவல் பரிந்துரைக்கிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 67,600 ஆகும். இதேபோல், TrendForce வெளியிட்ட முந்தைய சில அறிக்கைகளில் iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max மாடல்கள் இம்முறை விலை அதிகரிப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இரண்டு மாடல்களுக்கும் $50-$100 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

என்ன விலையில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

இதன்படி, ஐபோன் 14 ப்ரோ மாடலின் அறிமுக வெளியீட்டு விலை $1049 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 83,500 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை $1149 என்ற விலை வரம்பில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 91,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 Price Could Be Cheaper Than iPhone 13 At This Year Far Out Global Launch Event 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X