Home
News

கொக்கு போல தூக்குங்க.. ரூ.89,900 மதிப்புள்ள Apple போன் ரூ.44,749-க்கு விற்பனை!

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மீது பிளிப்கார்ட் (Flipkart) நம்ப முடியாத ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் 14 பிளஸ் போனின் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்டுகளை பாதிக்குப் பாதி விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

எப்படி வாங்குவது என்ற முழு விவரங்கள் இதோ. ஆப்பிள் ஐபோன்கள் என்றாலே தனி மவுசு தான். இந்த போனை ஒருமுறை பயன்படுத்திவிட்டால், வேறு போன்களுக்கு மாற மனசு வராது என்று ஆப்பிள் யூசர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இப்படிப்பட்ட ஆப்பிள் போனின் விலை மட்டும் அனைவருக்கும் பிடித்ததாக இருக்காது.

இதன் மவுசுக்கு ஏற்றாற்போலவே விலையும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும், பல மாதங்கள் பணத்தை சேமித்து வைத்து வாங்கக்கூடிய ஐபோன் பிரியர்களும் இருக்கின்றனர். ஆனால், சிலர் ஆஃபர்கள் வரும் வரை கொக்கு போல காத்திருந்து ஐபோனை தட்டித் தூக்க திட்டமிட்டு வருவார்கள்.

ரூ.89,900 மதிப்புள்ள Apple ஐபோன் ரூ.44,749-க்கு விற்பனை

அப்படிப்பட்ட நபர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. அதுவும் பாதிக்குப் பாதி ஆஃபர் விலையில் கிடைக்கிறது என்றால் எப்படி வாங்கமால் இருக்க முடியும். இந்த ஆஃபரை பயன்படுத்தி ரூ.89,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் 14 பிளஸை வெறும் ரூ.44,749-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் பிளிப்கார்ட் ஆஃபர்: ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் போனை பொறுத்தவரையில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் வருகிறது. இந்த மூன்று வேரியண்ட்டுகளும் முறையே ரூ.89,900, ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900-க்கு மார்க்கெட்டில் விற்பனையாகிறது. இந்த போன்களுக்கு ரூ.45,151 தள்ளுபடியை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

அதன்படி ரூ.89,900 விலை கொண்ட 128 ஜிபி வேரியண்டை வெறும் ரூ.44,749-க்கு வாங்கிக் கொள்ள முடியும். அதேபோல 256 ஜிபி வேரியண்டை ரூ.54,749-க்கும், 512 ஜிபி வேரியண்டை ரூ.74,749-க்கும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ஆஃபரை பொறுத்தவரையில், பிளிப்கார்ட்டின் சிறப்புத் தள்ளுபடியாக ரூ. 11,901 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) கிரெடிட் கார்டு வைத்திருந்தால் இஎம்ஐ (EMI) வசதியை தேர்வு செய்து கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, உங்களிடம் உள்ள பழைய ஐபோனுக்கு ரூ.29,250 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் பெறலாம். இப்படி ஒட்டுமொத்தமாக ரூ.45,151 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்: இந்த போனில் ஆப்பிள் ஏ15 பயோனிக் 5என்எம் (Apple A15 Bionic (5 nm)) சிப்செட் உள்ளது. 6 ஜிபி ரேம் உடன் 128, 256 மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 12 எம்பி மெயின் மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

4323 mAh பேட்டரி 16.68 வாட்ஸ் வயர்டு மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது. மிட்நையிட் (Midnight) , பர்பிள் (Outside) , ஸ்டார்லைட் Starlight) , ப்ளூ ( Blue), ரெட் ( Red ), யெல்லோ (Yellow) கலர்களில் விற்பனையாகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில் சூப்பர் ரெடினா எஸ்க்டிஆர் ஓஎல்டி (Super Retina XDR OLED) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 Plus flat offer Rs 44749 in the Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X