ஐபோன் 13 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடக்கம்- எப்படி வாங்குவது?

|

ஆப்பிளின் நான்கு சமீபத்திய ஐபோன்கள் உள்ளடக்கிய ஐபோன் 13 சீரிஸ் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் ஐபோன்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை அடங்கும். ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் மற்றும் இந்தியாவின் பிற முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும்.

ஐபோன் 13 சீரிஸ்: விலை

ஐபோன் 13 சீரிஸ்: விலை

ஐபோன் 13 சீரிஸ்-ன் மலிவான மாடல், ஐபோன் மினி 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.69,990 ஆகும். ஐபோன் 13 மினி 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 மற்றும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.99,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 13 சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.79,900 ஆகவும் அதேபோல் 256 ஜிபி மாடல் விலை ரூ.89,900 ஆகவும் ஐபோன் 13 பிரிவில் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,09,900 ஆகவும் இருக்கிறது.

ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 ப்ரோவின் விலை 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900 ஆகவும் 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,29,900 ஆகவும் இருக்கிறது. இந்த ஐபோன் மாடலின் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,49,900 ஆகவும் இருக்கிறது. அதேபோல் ப்ரோ மாடலின் உயர்நிலை மாறுபாடான 1டிபி உள்சேமிப்பு விலை ரூ.1,69,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,29,900 ஆகவும் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,39,900 ஆகவும் இருக்கிறது. 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,59,900 ஆகவும் 1டிபி வேரியண்ட் விலை ரூ.1,79,900 ஆகவும் இருக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ்: கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

ஐபோன் 13 சீரிஸ்: கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ப்ளூ, பிங்க், மிட்நைட், ரெட் மற்றும் ஸ்டார்லைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கின்றன. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் கோல்ட், கிராஃபைட், சியரா ப்ளூ மற்றும் சில்வர் ஹியூஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி சாதனத்துக்கு விற்பனை சலுகை வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.6000 வரை தள்ளுபடி கிடைக்கும். எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.5000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ் சில்லறை விற்பனை

ஐபோன் 13 சீரிஸ் சில்லறை விற்பனை

ஐபோன் 13 சீரிஸ் வாங்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் கூடுதல் எக்ஸ் சேஞ்ச் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. புதிய மாடலுக்கு தள்ளுபடிகள் கிடைக்கும். ஆன்லைன் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான மாதாந்திர தவணை திட்டங்களையும் வழங்குகிறது.

3x ஆப்டிகல் ஜூம்

3x ஆப்டிகல் ஜூம்

ஆப்பிள் ஐபோன் 13 மாடல்கள் ஆனது 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட புதிய கேமரா உள்ளிட்ட முக்கிய மேம்பாட்டு அம்சத்தோடு வருகிறது. குறைந்த ஒளியிலும் புகைப்படத்தை பதிவு செய்ய ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் பெரிய சென்சார் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் வருகின்றன. அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் அம்சம் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் புதிய மேக்ரோ பயன்முறையுடன் வருகிறது.

6.1 இன்ச் டிஸ்ப்ளே

6.1 இன்ச் டிஸ்ப்ளே

ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. புதிய ஏ15 பயோனிக் சிப் வசதியோடு ஐபோன் 13 இயங்குகிறது. 5ஜி ஆதரவோடு இந்த சாதனங்கள் வருகிறது.

மேம்பட்ட வீடியோ பதிவு

மேம்பட்ட வீடியோ பதிவு

ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் வீடியோக்களை பதிவு செய்ய விரும்பும் பயனர்களுக்கு புதிய சினிமா பயன்முறையை வழங்குகின்றன. அதேபோல் இது டைம் லேப்ஸ் மற்றும் ஸ்லோ மோட் கேமரா பயன்முறையோடு வருகிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் வழக்கமான ஸ்மார்ட்போன் கண்ணாடிக்கு பதிலாக செராமிக் ஷீல்ட் உடன் வருகிறது. இது கவர் கண்ணாடியை விட வலிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Iphone 13 Series Sale Started in India: Specs, Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X