Home
News

iPhone 13: மீண்டும் நீங்கள் எதிர்பார்க்காத விலைகுறைப்பு: புதிய விலை மற்றும் கூடுதல் சலுகை விபரம் இது தான்..

iPhone 13 Price Drop: ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் தொடரான ​​iPhone 13, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் பயனர்கள் பெறும் விலையுடன் ஒப்பிடுகையில், ஈ-காமர்ஸ் சில்லறை நிறுவனமான அமேசான் தளத்தில் இப்போது ஐபோன் 13 சாதனம் மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. அமேசான் மட்டுமின்றி, Flipkart நிறுவனம் கூட ஆப்பிள் ஐபோன் 13 மீது தள்ளுபடியை வழங்குகிறது. ஆனால் அமேசானில் இருந்து ஷாப்பிங் செய்யும் போது பயனர்கள் பெறும் அளவிற்கு இது இல்லை.

இந்தியாவில் தற்போது iPhone 13 விலை

இந்தியாவில் தற்போது iPhone 13 விலை

ஆப்பிள் ஐபோன் 13 அமேசானில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் விலை ரூ. 10,000 வரை தற்போது குறைந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 இப்போது இ-காமர்ஸ் தளத்தில் வெறும் ரூ. 69,900 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் கடந்த செப்டம்பர் 2021 இல், வெறும் ரூ. 79,900 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது 128GB உடன் வந்த அடிப்படை மாறுபாட்டின் விலையாகும்.

ஆப்பிள் ஐபோன் 13 இவ்வளவு குறைந்த விலையிலா?

ஆப்பிள் ஐபோன் 13 இவ்வளவு குறைந்த விலையிலா?

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 13 இன் 128ஜிபி மாறுபாட்டை ரூ. 70,000 என்ற விலைக்கும் குறைவாகப் பயனர்கள் இப்போது பெறலாம். மேலும், இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கு பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், பயனர்களுக்கு உடனடி தள்ளுபடி வடிவில் ரூ. 1,500 அதிகமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. பயனர்கள் தங்கள் பழைய சாதனத்தை ஐபோன் 13 மாடலுக்கு எக்ஸ்சேஞ் செய்து மாற்றிக் கொள்ளும் வசதியையும் அமேசான் வழங்குகிறது. இது பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடியைப் பெற அனுமதிக்கும்.

ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடியை பெற

ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடியை பெற

பாங்க் ஆஃப் பரோடா கார்டு மூலம், பயனர் EMI பரிவர்த்தனை செய்தால், பயனர்களுக்கு உடனடி தள்ளுபடியாக ரூ. 2,000 வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல், ஆப்பிள் ஐபோன் 13 தொடரில் உள்ள சற்றே சிறிய பதிப்பான ஆப்பிள் ஐபோன் 13 மினி சாதனம் கூட இப்போது விலை குறைப்பை பெற்றுள்ளது. டிச்ன்படி, அமேசானில் ஆப்பிள் ஐபோன் 13 மினி வெறும் ரூ. 64,999 என்ற விலைக்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. நாங்கள் மீண்டும் அடிப்படை மாறுபாடு பற்றி பேசுகிறோம், இது 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

256ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இவ்வளவு தானா?

256ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இவ்வளவு தானா?

இருப்பினும், தற்போது, ​​அடிப்படை மாறுபாடு கையிருப்பில் இல்லாததால், பயனர்கள் இந்த விலையில் iPhone 13 mini ஐப் பெற முடியாது. இருப்பினும், பயனர்கள் அமேசானில் 256ஜிபி மாறுபாட்டிற்கு செல்லலாம், இது உங்களுக்கு இப்போது வெறும் ரூ. 73,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் அறிமுகம் வரை இன்னும் எத்தனை விலைக் குறைப்புக்கள் வரும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் ஐபோன் 14 தொடரை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஆப்பிள் iPhone 14 பற்றிய தகவல்

ஆப்பிள் iPhone 14 பற்றிய தகவல்

ஆப்பிள் நிறுவனம் அதன் 'மினி' ஐபோன் மாடலை 14 தொடரில் இருந்து கைவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக நிறுவனம் ஆப்பிள் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max உடன் மட்டுமே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, நிறுவனம் இப்போது வரை மேற்கொள்ளாத வித்தியாசமான யுக்தியை ஐபோன் 14 தொடரில் கொண்டுவரவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Series Gets Price Drops Further in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X