ஆப்பிள் ஐபோன் 13 வாங்கலாமே- சும்மா இல்ல ரூ.10,000 தள்ளுபடியில் விற்பனை: உடனே முந்துங்குள்!
வடிவமைப்பு முதல் அடிப்படை தொழில்நுட்பம் வரை, எல்லாமே சிறந்த விதத்தில் உருவாக்கப்படுவது தான் ஆப்பிள் சாதனங்கள். ஆப்பிள் தொலைப்பேசியில் தவறுகளைக் கண்டறிவது கடினம். ஆனால் ஆப்பிள் போனை எல்லோராலும் வாங்கிட முடியாது, காரணம் இதன் விலை மிகவும் அதிகமானதாக இருக்கிறது. ஆப்பிளின் நுழைவு நிலை ஐபோன் கூட அதிக விலை கொண்டதாக இருக்கிறது. இருப்பினும் ஆப்பிள் சாதனங்களுக்கு அவ்வப்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு நம் கைக்கெட்டும் வகையில் வந்து செல்கிறது. அதன்படி தற்போது ஐபோன் 13 சாதனத்துக்கு அறிவிக்கப்பட்ட தள்ளுபடியை பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 13
ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் விலையானது கடந்த சில வாரங்களில் வழங்கப்பட்டதை விட சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னணி ஷாப்பிங் தளங்களில் ஒன்றான விஜய் சேல்ஸ்-ல் ஐபோன் 13 மாடலுக்கு அதிக அளவில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சாதனம் வாங்க விரும்பினால் அதற்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

ரூ.5000 பிளாட் தள்ளுபடி, ரூ.5000 கேஷ்பேக் சலுகை
ஐபோன் 13 சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விஜய் சேல்ஸ் ரூ.5000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் ஐபோன் 13 சாதனத்தை வாங்கும் போது ரூ.5000 கேஷ்பேக் சலுகையை பெறுவார்கள், இரண்டும் சேர்த்து இந்த சாதனத்துக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விஜய் சேல்ஸ் மூலம் வழங்கப்படும் இந்த சலுகையான சில நிபன்தனைகளுக்கும் உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விஜய் சேல்ஸ் மூலம் ஐபோன் 13 சாதனத்தை சலுகையுடன் வாங்குவதற்கு தேவையான விவரங்களை பார்க்கலாம்.

தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் பெறுவதற்கு நிபந்தனைகள்
விஜய் சேல்ஸ்-ல் ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.5000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு கூடுதலாக ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.79,900-க்கு விற்கப்பட்ட ஐபோன் 13 சாதனமானது ரூ.74,900 என வாங்கலாம். இந்த சலுகையை பெறுவதான விதிமுறைகளை பார்க்கையில், விஜய் சேல்ஸ்-ன் கடைகளில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. விஜய் சேல்ஸ் இணையதளத்தில் ஐபோன் 13 வாங்கும் போது இந்த தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 13 சாதனத்தை ஆன்லைன் மூலம் வாங்க விரும்பினால் அதுத்தனியாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த சலுகையானது விஜய் சேல்ஸ் கடையில் கிடைக்கும் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் மட்டுமே
ஐபோன் 13 சாதனம் விஜய் சேல்ஸ்-ல் வாங்குபவர்களுக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் நீங்கள் கேஷ்பேக் பெற வேண்டும் என்றால் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.5000 கேஷ்பேக் வேண்டும் பட்சத்தில் நீங்கள் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும், பிற கார்ட்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிற கார்ட்கள் பயன்படுத்தினால் ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படாது என கூறப்படுகிறது. ரூ.10,000 தள்ளுபடி விலையில் ஆப்பிள் ஐபோன் 13 வாங்க சரியான நேரம் இதுவாகும். தற்போது ஐபோன் 13 வாங்கும் போது ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. விஜய் சேல்ஸ் கடைகளில் உங்கள் பழைய மற்றும் பயன்படுத்திய சாதனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புது சாதனம் வாங்கிக் கொள்ளலாம்.

6.10 இன்ச் டிஸ்ப்ளே, A15 பயோனிக் சிப்செட்
ஐபோன் 13 சாதனம் 6.10 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் (5 nm) சிப்செட் உடன் கிடைக்கிறது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications