அடடா, பார்க்கவே அப்படி இருக்கு: அடுத்த மாதம் வெளியாகும் ஐபோன் 13 விலை இதுவா?- ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!
ஆப்பிள் நிறுவனத்துக்கு என ரசிகர்கள் பட்டாளமே இருக்க தான் செய்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் கவனமும் ஐபோனை நோக்கியே இருக்கிறது. ஆப்பிள் நிறுவனமும் அடுத்தடுத்த ஐபோன்களை பல்வேறு புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

ஐபோன் 13 சீரிஸ்
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சாதனமும் ஐபோன் 12 சீரிஸ் போன்றே நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிக ரெப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே
முந்தை ஐபோன் மாடலைவிட ஐபோன் 13 தொடரில் அதிக ரெப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே, சிறந்த கேமரா அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஐபோன் 13 தொடர் விலை மதிப்பீடு குறித்து பார்க்கலாம்.

ஐபோன் 13 சாதனத்தின் விலை
ஐபோன் 13 மினி சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில் இது 699 டாலர்களாக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.51,896 ஆகும். அதேபோல் ஐபோன் 13 விலை 799 டாலர் ஆகவும் இருக்கிறது. இந்திய மதிப்புப்படி ரூ.59,320 ஆக உள்ளது. ஐபோன் 13 ப்ரோ விலையானது 999 டாலர்களாகும் இதன் இந்திய மதிப்பு ரூ.74,169 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை உயர்ந்த சாதனமாக இருக்கிறது. இது 1099 டாலர்களாக அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.81,594 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 13 சாதனம் 1 டிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வரும் எனவும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஐபோன் 12 சாதனத்தின் முக்கிய அம்சங்கள்
ஐபோன் 12 சாதனத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஐபோன் செராமிக் ஷீல்ட் கண்ணாடி தொழில்நுட்த்தையும் கொண்டுள்ளது. இந்த அம்சமானது ஐபோன் 11-ல் வழங்கப்பட்ட எல்சிடி பேனலை விட மிகவும் சிறந்தவையாகும். ஐபோன் 12 5ஜி ஆதரவோடு வருகிறது. இது ஏ14 பயோனிக் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஏ14 பயோனிக் ஆனது நான்கு கோர் ஜிபியூ உடன் ஆறு கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது டால்பி விஷன் அம்சத்தை கொண்டுள்ளது.

இரட்டை 12 மெகாபிக்சல் அகல கோண சென்சார்கள்
ஐபோன் 12 சாதனமானது இரட்டை 12 மெகாபிக்சல் அகல கோண சென்சார்கள் ஆதரவோடு வருகிறது. இது குறைந்த ஒளி நிலையிலும் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. முன்புற கேமரா உட்பட அனைத்து கேமராக்களும் ஆப்பிள் நைட் மோட் அம்சத்தோடு வருகிறது. முன்புறத்திலும் 12 எம்பி ட்ரூ டெப்த் நைட்மோட் கேமராவோடு வருகிறது. நைட் மோட் அம்சமானது டைம் லேப் ஆதரவையும் கொண்டிருக்கிறது. குறைந்த ஒளி அளவிலும் படம்பிடிக்க இது உதவுகிறது. 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங் ஆதரவோடு இது வருகிறது.

சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
ஐபோன் 12 மேக் சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு 15 வாட்ஸ் சார்ஜிங் மற்றும் க்விக் வயர்லெஸ் சார்ஜிங் 7.5 வாட்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது 2815 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 17 மணிநேர வீடியோ ப்ளேபேக் அம்சத்தை இது வழங்குகிறது. ஐபோன் 12-ல் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் வைஃபை 6, ப்ளூடூத் 5, அல்ட்ரா வைட்பேண்ட் பொசிஷனிங், ஐபிஎஸ் மற்றும் என்எஃப்சி ஆகியவையும் இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications