ஐபோனை சொந்தமாக்க சரியான நேரம்- அமேசானில் எதிர்பாராத விலைக் குறைப்புடன் ஐபோன் 13., ஐபோன் எஸ்இ 2022!
ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் எஸ்இ 3 2022 மாடல் கவர்ச்சிகரமான அம்சங்கள் உடன் வருகிறது. ஐபோன் 13 சாதனத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 அடிப்படை மாடல் விலை வெறும் ரூ.53,100 ஆக இருக்கிறது. அமேசானில் வழங்கப்படும் தள்ளுபடியில் ஐபோன் 13 என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ.79,900 ஆக இருந்தது. தற்போது அமேசான் தள்ளுபடி விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனத்துக்கு ஆறு சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சாதனத்தின் விலை ரூ.74,900 என வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உட்பட இன்னும் சில தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வெறும் ரூ.53,100 என வாங்கலாம். பழைய சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ஐபோன் 13 வாங்கும் போது ரூ.15,800 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம். இதன் மூலம் இந்த சாதனத்தை ரூ.59,100 என கிடைக்கிறது. அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.53,100 என வாங்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் குறித்த விவரம்
எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆனது நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பும் சாதனம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனத்தின் தரம், தயாரிக்கப்பட்ட ஆண்டு, சாதன சேதங்கள், திரையின் நிலை உள்ளிட்டவைகளை அமேசான் சரிபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தான் ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.15,800 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 13 தள்ளுபடி மற்றும் ஐபோன் எஸ்இ 2022
சமீபத்தில் ஐபோன் 11 சாதனத்துக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த சாதனம் ரூ.35,000 ஆக இருக்கிறது. ஐபோன் 11 இரண்டு தலைமுறைக்கு முந்தையது. ஐபோன் 13 என்பது பிராண்டின் மிகவும் சமீபத்திய ப்ரீமியம் சாதனமாகும். ஐபோன் 13 ஆனது ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் சாதனமாகும். இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு, சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 சாதனமும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனமாகும். இதுவும் ஏ15 பயோனிக் சிப்செட் வசதியோடு வருகிறது. இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. ஐபோன் எஸ்இ 2022 ஆனது பல டோன்ட் டவுன் அம்சங்களை கொண்டிருக்கிறது. தள்ளுபடியுடன் இந்த சாதனத்தை ரூ.30,3000-க்கு வாங்கலாம்.

பின்புறத்தில் 12 எம்பி கேமரா
ஐபோன் எஸ்இ 5ஜி பின்புறத்தில் 12 எம்பி கேமரா சென்சார் உடன் வருகிறது. புகைப்பட அம்சங்களை பொறுத்தவரையில், இது ஸ்மார்ட் எச்டிஆர் 4, டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை போன்ற ஐபோன் 13 கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 5ஜி ஆனது ஐஓஎஸ் 15 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பல வருடங்களுக்கு புதுப்பிப்புகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ, ஐபோன் 13 தள்ளுபடி
புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 12-ல் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்ட் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது அலுமினியம் மற்றும் கண்ணாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் பொருத்தப்பட்ட 12 எம்பி சென்சார் உடன் இது வருகிறது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி67 மதிப்பீடு உடன் இது வருகிறது. புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஸ்டார்லைட், மிட்நைட் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று சேமிப்பக கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இதன் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.43,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.48,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.58,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட் ஐபோன் மாடல் ஆனது மார்ச் 11 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 30 நாடுகளில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்க உள்ளது. மார்ச் 18 முதல் ஷிப்பிங் நடைபெறும். ப்ரீமியம் சாதனமான ஐபோன் 13-ம், ஐபோன் எஸ்இ 2022-ம் அமேசானில் சிறந்த சலுகையுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications