அடடா., வேற லெவல்- ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.27,000 தள்ளுபடி: சரி., ஐபோன் 14 வரப்போகுதே இதை வாங்கலாமா?

|

இன்னும் சில மாதங்களில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ்-க்கு தொடர்ந்து தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் தளத்தில் புதியபச்சை வண்ண மாறுபாட்டிற்கு ரூ.27,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 13 பச்சை நிற மாறுபாட்டை எப்படி இந்த சலுகையில் வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபோன் 13 தள்ளுபடி

ஐபோன் 13 தள்ளுபடி

ஐபோன் 13 சாதனம் சந்தையில் மிகவும் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் சாதனங்களில் ஒன்றாகும். இது ஸ்டைலான வடிவமைப்பு, உயர்நிலை கேமராக்கள் மற்றும் மேம்பட்ட செயலி ஆதரவோடு வருகிறது. ஐபோன் 13 க்ரீன் வேரியண்ட் ஆனது தற்போது ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் ரூ.79,900 என கிடைக்கிறது. ஆப்பிள் ப்ரீமியம் விற்பனையாளரான ஐஸ்டோர், ஐபோன் 13 க்ரீன் சாதனத்துக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஐஸ்டோர் தள்ளுபடி விவரம் குறித்து பார்க்கையில், 128 ஜிபி வேரியண்ட் ஐபோன் 13 க்ரீன் மாடலுக்கு ரூ.27000 வரை தள்லுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடி தள்ளுபடி சலுகையாக ரூ.5000 வழங்கப்படுகிறது. அதேபோல் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் சாதனம் வாங்கும் போது ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் சலுகை

எக்ஸ்சேஞ்ச் சலுகை

அதேபோல் மீதமுள்ள தள்ளுபடி தொகை எக்ஸ்சேஞ்ச் சலுகையாக வழங்கப்படுகிறது. அடிப்படை மாடலான 64 ஜிபி வேரியண்ட் உடனான ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தின் பரிமாற்றத்துக்கு ரூ.18,000 தள்ளுபடி வழங்கப்படுக்கிறது. பரிமாற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பது மாறுபடும். பரிமாற்றம் செய்யும் தொலைபேசி எந்த சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் இருத்தல் மிக அவசியம். ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை பரிமாற்றி இந்த சாதனம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நல்ல நிலையில் இருத்தல் மிக அவசியம்.

ஐபோன் 13 அம்சங்கள்

ஐபோன் 13 அம்சங்கள்

புதிய ஐபோன் 14 சீரிஸ் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சாதனம் பல மேம்படுத்தல்களை கொண்டுவரும் என்பது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போதைய நிலைப்படி ஐபோன் 13 என்பது மிக சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. எனவே இந்த சாதனத்தை வாங்குபவதற்கு இது நல்ல வாய்ப்பாகும். ஐபோன் 13 க்ரீன் மாறுபாட்டை தற்போது வெறும் ரூ.52,900 என வாங்கலாம். ஐபோன் 13 சாதனம் சக்தி வாய்ந்த இரட்டை கேமராக்கள் உடன் வருகிறது. இது அதிவேக ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் முன்னோடியில்லாத ஏ15 பயோனிக் சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இதில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதியும் அடங்கும். அடுத்த ஆண்டுகளுக்கு ஐபோன் 13 நிச்சயமாக ஐஓஎஸ் புதுப்பிப்பை பெறும் என்பது உறுதி. இதன்மூலம் ஐபோன் 13 என்பது தொடர்ந்து சக்திவாய்ந்த சாதனமாகவே இருக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சம்

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஐபோன் 13 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவோடு வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 12 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஐபோன் 13 சாதனமானது 6.1 இன்ச் 1170 x 2532 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் ஹெக்ஸா கோர் செயலி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்துக்கு என கொரில்லா கிளாஸ் வசதி, வாட்டர் ப்ரூப் வசதி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Green Gets Huge Discount: How to Claim it?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X