Home
News

ஆப்பிள் ஐபோன் 13 மீது ரூ.11,000 பிரைஸ் கட்.. இதைவிட பெஸ்ட் சலுகை கிடைக்காது மக்களே..

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மாடலை வாங்க ஆசை இருப்பவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய அரிய வாய்ப்பு. இப்போது, அமேசான் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 13 மீது பெரும் நம்ப முடியாத தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விலை எந்த வகையான பரிமாற்ற சலுகையையும் இணைக்காமல் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. ஆப்பிள் ஐபோன் 13 மீதான இந்த சலுகையை எப்படிப் பெறலாம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 13 மீது நம்ப முடியாத சலுகை

ஆப்பிள் ஐபோன் 13 மீது நம்ப முடியாத சலுகை

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் மீது நம்ப முடியாத மாபெரும் பிரைஸ் கட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தை வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே சரியான நேரமாகும். உண்மையில் நீங்கள் ஒரு புதிய ஐபோன் 13 சாதனத்தை வாங்க நினைத்திருந்தால், இந்த சலுகை உங்களை அதிர்ஷ்டசாலியாக்குகிறது. மற்ற பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் உங்கள் பழைய சாதனத்தின் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மட்டுமே ஐபோன் 13 ஐ வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள்.

ரூ.11,000 மதிப்பிலான மெகா தள்ளுபடி

ரூ.11,000 மதிப்பிலான மெகா தள்ளுபடி

ஆனால், அமேசான் இந்திய உண்மையில் ரூ.11,000 மதிப்பிலான மெகா தள்ளுபடியை வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன் 13 மீது இப்போது கிடைக்கும் ரூ. 11,000 தள்ளுபடியில் மூலம், நீங்கள் உங்களுடைய புதிய ஐபோன் 13 சாதனத்தை ஆப்பிள் iPhone 13 Mini மாடலின் அடிப்படை வேரியண்ட் விலையில் நீங்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நுட்ஜெட் விலைக்குள் ஆப்பிள் ஐபோன் மினி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் இப்போது இந்த சலுகையில் மூலம் புதிய ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மாடலையே பெறலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

ரூ. 6,000 கூடுதல் சலுகையும் கிடைக்கிறதா?

ரூ. 6,000 கூடுதல் சலுகையும் கிடைக்கிறதா?

இப்போது ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நம்பமுடியாத ஒப்பந்தம் ஆகும். இதில் கவனிக்கத்தக்கச் சிறந்த அம்சம் என்னவென்றால், முன்பே சொன்னது போல இந்த விலையைப் பெறுவதற்கு நீங்கள் எந்தவித மாற்றுச் சலுகையும் இல்லாமல் கிடைக்கிறது. அமேசான் நிறுவனமே இப்போது ஆப்பிள் ஐபோன் 13 மாடலை இப்படி கம்மி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை உங்களுக்கு குறிப்பிட்ட சில வங்கியின் அட்டைகளுடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கூடுதலாக ரூ. 6,000 விலை குறைப்பைப் பெறலாம்.

ஆப்பிள் ஐபோன் 13 விலை மீது ரூ. 11,000 தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 13 விலை மீது ரூ. 11,000 தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாறுபாட்டிற்கு விலை ரூ. 79,900 ஆக இருக்கிறது. அமேசான் இப்போது இந்த விலையின் மீது நேரடி தள்ளுபடி வழங்குகிறது. இதன் படி, ஆப்பிள் ஐபோன் 13 இன் விலை ரூ. 5,000 நேரடி தள்ளுபடியைப் பெற்ற பிறகு ரூ. 74,900 ஆக வருகிறது. இந்த விலை தற்போது Amazon இல் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. மேலும், ரூ. 6000 தள்ளுபடி பெற, நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த வங்கி அட்டைதாரர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி

இந்த வங்கி அட்டைதாரர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி

அதேபோல், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, கோடக் வங்கி கார்டுகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த ரூ. 6,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ரூ. 6,000 தள்ளுபடி பயன்படுத்தப்பட்ட பிறகு, iPhone 13 போனின் 128 GB சேமிப்பு மாடலின் விலை ரூ. 68,990 ஆக குறைகிறது. இது மற்ற சில்லறை விற்பனையாளர்களின் iPhone 13 Mini இன் விளம்பரப்படுத்தப்பட்ட விலையை விட ரூ. 1,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் iPhone 13 போனின் மற்ற வேரியண்ட் மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி?

ஆப்பிள் iPhone 13 போனின் மற்ற வேரியண்ட் மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி?

அதேபோல், iPhone 13 போனின் 256 ஜிபி வேரியண்ட் மாடல் குறைந்த விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த வேரியண்ட் மாடலின் விலை ரூ. 84,900 என்ற குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும், நீங்கள் கூடுதலாக ரூ. 6,000 கார்டு நன்மையை பெரும் பொழுது இதன் விலை ரூ. 78,900 ஆக குறைகிறது. இது அடிப்படை iPhone 13 இன் கிட்டத்தட்ட அதே விலையாகும். இதேபோல், ஆப்பிள் ஐபோன் உயர் வேரியண்ட் மாடலின் மீதும் சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகை எவ்வளவு நாள் கிடைக்கும்?

இந்த சலுகை எவ்வளவு நாள் கிடைக்கும்?

அதேபோல், ஆப்பிள் iPhone 13 மாடலின் 512 ஜிபி மாறுபாடும் தள்ளுபடி விலையில் ரூ. 1,04,900 மற்றும் வங்கி ஆடைகளுடன் நன்மைகளுடன் ரூ. 6000 கூடுதல் தள்ளுபடியைப் பெற்றவுடன் உங்கள் விலை ரூ. 98,900 ஆக குறைகிறது. கூடுதல் ரூ. 6000 கார்டு தள்ளுபடி வரும் மார்ச் 26, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, எந்த வேரியண்ட் மாடலின் ஐபோன் 13 வேரியண்ட்டை பெறப்போகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவுசெய்ய உங்களுக்கு போதிய நேரம் உள்ளது. ஆனால், குறைந்த யூனிட்கள் மட்டுமே இருக்கும் காரணத்தினால் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Gets Rs 11000 Price Cut And Now Its Costs Same As iPhone 13 Mini : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X