Home
News

எந்த ஐபோனுக்கும் இது நடந்தது இல்லை- அடுத்தடுத்து விலைக் குறைப்பு என மிக குறைந்த விலையில் ஐபோன் 13- வாங்கலாமே!

அமேசான் இந்தியாவின் இணையதளத்தில் ஐபோன் 13 தற்போது ரூ.71,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் சாதனம் இதுவாகும். இந்த ஐபோன் 13 சாதனமானது ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது இந்த ஐபோன் 13 சாதனம் ரூ.71,900 என விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஐபோன் 13 சாதனம் ரூ.6000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.73,900 என கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 13 சாதனத்துக்கு விலைக் குறைப்பு

ஐபோன் 13 சாதனத்துக்கு விலைக் குறைப்பு

ஐபோன் 13 தொடர் சாதனமானது இந்தியாவில் செப்டம்பர் 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் ஐபோன் 13 சாதனமானது பல விலைக் குறைப்புகளை பெற்றிருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஐபோன் 13 சாதனத்துக்கு இந்தியாவில் ரூ.2000 கூடுதல் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். ஐபோன் 13 சாதனத்துக்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 சாதனத்துக்கு வழங்கப்படும் புதிய விலை மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

எந்தவொரு ஐபோனுக்கும் வழங்காத அளவு தள்ளுபடி

எந்தவொரு ஐபோனுக்கும் வழங்காத அளவு தள்ளுபடி

ஐபோன் 13 அறிமுகமானது முதல் தற்போதுவரை மொத்தமாக ரூ.8000 விலைக் குறைப்பைப் பெற்றிருக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் ஐபோன் 13 சாதனம் தற்போது ரூ.71,900 என விற்பனை செய்யப்படுகிறது. எந்தவொரு ஐபோன் சாதனங்களுக்கும் இந்த அளவுக்கு தள்ளுபடி வழங்கப்படவில்லை ஐபோன் 13-க்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஐபோன் 13 சாதனம் ரூ.71,900 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

முன்னதாக ரூ.6000 விலைக்குறைப்பு

முன்னதாக ரூ.6000 விலைக்குறைப்பு

முன்னதாக ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.6000 விலைக்குறைப்பு செய்யப்பட்டு ரூ.73,900 என கிடைத்தது. கூடுதலாக ஐபோன் 13 சாதனத்துக்கு எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் சலுகையும் வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி நீங்கள் இந்த சாதனம் வாங்கும் போது ரூ.5,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஐபோன் 13 சாதனம் இறுதியாக ரூ.66,900 என கிடைக்கிறது.

6.10 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

6.10 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

ஆட்டோஃபோகஸ் அம்சத்துடன் கேமரா

ஆட்டோஃபோகஸ் அம்சத்துடன் கேமரா

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது.

12 எம்பி டூயல் கேமரா, 12 எம்பி முன்புற கேமரா

12 எம்பி டூயல் கேமரா, 12 எம்பி முன்புற கேமரா

ஐபோன் 13 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 12 எம்பி மற்றும் 12 எம்பி என்ற டூயல் லென்ஸ் ஆதரவோடு வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 12 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஐபோன் 13 சாதனமானது 6.1 இன்ச் 1170 x 2532 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் ஹெக்ஸா கோர் செயலி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்துக்கு என கொரில்லா கிளாஸ் வசதி, வாட்டர் ப்ரூப் வசதி மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Iphone 13 Gets Again Price Cut in India: Specs, Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X