Home
News

அடேங்கப்பா.. ஆப்பிள் ஐபோன் 13 இல் இவ்வளவு மாற்றங்களா? டாப் கிளாஸ் சிறப்பம்சங்களால் ரசிகர்கள் குஷி..

ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தனது ஐபோன் 13 சீரிஸ் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 தொடரில் பல வருடங்களாக பயனர்கள் கோரும் பல பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தது. அது தற்போது உண்மையானது போல் தெரிகிறது. சமீபத்தில் வெளியான கசிவுகள் படி, ஐபோன் 13 தொடர் பெரிய பேட்டரி உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 தொடரில் களமிறங்கும் அட்டகாசமான மாற்றங்கள்

ஆப்பிள் ஐபோன் 13 தொடரில் களமிறங்கும் அட்டகாசமான மாற்றங்கள்

ஐபோன்களின் பேட்டரி செயல்திறனில் சிறிது சோர்வடைந்ததாக ஆப்பிள் ரசிகர்கள் கவலை கொண்டனர். இந்த சிக்கலை சந்தித்த ஆப்பிள் பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. மேலும், iPhone 13 தொடர் பரந்த mmWave 5G ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 தொடருக்கான சாதனம் A15 பயோனிக் சிப்செட் உடன் 5 என்எம்+ அடிப்படையில் இயங்கக்கூடியதாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

A15 பயோனிக் சிப்செட் 5nm+ இயக்கம்

A15 பயோனிக் சிப்செட் 5nm+ இயக்கம்

ட்ரெண்ட் மைக்ரோவின் கசிவின்படி, ஐபோன் 13 சீரிஸுடன் வரும் A15 பயோனிக் சிப்செட் 5nm+ செயல்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் அமெரிக்காவிற்கு வெளியே இந்த புதிய ஐபோன் 13 சீரிஸுடன் ஐபோன்களுக்கு எம்எம்வேவ் 5 ஜி ஆதரவை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஐபோன் 13 சீரிஸ் சாதனங்கள் பெரிய சைஸ் பேட்டரிகளுடன், 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 மாடலில் 1TB மாடலா?

ஆப்பிள் ஐபோன் 13 மாடலில் 1TB மாடலா?

ஐபோன் 12 ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 13 தொடர் சாதனங்களின் நாட்ச் முன்பைவிட இன்னும் சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 மாடலில் இந்த முறை நிறுவனம் 1TB மாடல் வகையை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி மற்றும் ஐபோன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு என்பதைக் கேட்கவே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. சாதனங்களின் விலை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட ஐபோன் 12 தொடரைப் போலவே இருக்கக் கூடும்.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தில் மிரட்டலான டிஸ்பிளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தில் மிரட்டலான டிஸ்பிளே

ஐபோன் 13 சீரிஸுடன் பயனர்கள் பெறக்கூடிய இன்னும் ஒரு பெரிய மேம்படுத்தல் உள்ளது. மேலும் இது அதிக புதுப்பிப்பு விகித டிஸ்பிளேவை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்திற்கு ஆதரவை வழங்க ஆப்பிள் சாம்சங்கின் LTPO டிஸ்ப்ளேவைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சிப் பற்றாக்குறையால் ஐபோன் 13 தொடர் எவ்வாறு பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆப்பிள் தனது ரசிகர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Expected To Come With Bigger Battery And mmWave 5G Support : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X