கட்டளையே சாசனம்: 2023 ஆரம்பத்தில் உங்க கையில் iPhone 13 இருக்கும்! இதை பாருங்க..

|

Flipkart இயர் எண்ட் விற்பனையில் ஐபோன் 13 ஆனது அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. நீங்கள் புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். இதில் குறிப்பிட்டத்தக் விஷயம் என்னவென்றால் ஐபோன் 13 ஆனது சமீபத்திய மற்றும் மேம்பட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

புதிய ஐபோன் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும். ஐபோன் 13 ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சிறந்த தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஐபோன் 14 அறிமுகமான நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்விக்கான பதிலை பின்னர் பார்க்கலாம். ஆனால் நீங்கள் புதிய ஐபோன் 13 வாங்குவதற்கு இது சரியான நேரமாகும்.

கட்டளையே சாசனம்: 2023 ஆரம்பத்தில் உங்க கையில் iPhone 13 இருக்கும்!

ஐபோன் 13 விலை

Flipkart இயர் எண்ட் விற்பனையில் iPhone 13 இன் 128ஜிபி வேரியண்ட் மாடலானது ரூ.40,000க்கு கிடைக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். இந்தியாவில் ஐபோன் 13 விலை ஆனது இந்தியாவில் ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த ஐபோன் 13 மாடல் தான் ரூ.40,000க்கு கிடைக்கிறது. தள்ளுபடி விலையில் ஐபோன் 13 மாடலை எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனை

ஐபோன் 13 மாடல் ஆனது ரூ.69,900க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் ரூ.61,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.8000 வரை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரி, ரூ.40,000க்கு ஐபோன் 13 மாடலை எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை

எக்ஸ்சேஞ்ச் சலுகையை உட்படுத்தினால் ஐபோன் 13 மாடலை ரூ.40,000 என்ற விலையில் வாங்கலாம். iPhone 11 அல்லது iPhone XR மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்தால் நிறுவனம் ரூ.21,900 வரை தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ரூ.61,999க்கு விற்கும் ஐபோன்11 மாடலை ரூ.40,000க்கு வாங்கலாம். ஆனால் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் மாடல் நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

கட்டளையே சாசனம்: 2023 ஆரம்பத்தில் உங்க கையில் iPhone 13 இருக்கும்!

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது. எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

சிறந்த பேட்டரி ஆதரவு..

ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Iphone 13 Available at Huge Discount Price in Flipkart Year End Sale: How to Buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X