Home
News

பொங்கலோ பொங்கல்., இது iPhone பொங்கல்: அனைவர் கையிலும் ஐபோன்.. இதைமட்டும் பண்ணுங்க!

iPhone 13 இன் அதிகாரப்பூர்வ விலை ஆனது ஆப்பிள் இணையதளத்தில் ரூ.69,900 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளத்தில் இந்த ஐபோன் மாடல் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பொங்கலோ பொங்கல்., இது iPhone பொங்கல்: அனைவர் கையிலும் ஐபோன்..

ஐபோன் 13 விலை

iPhone 13 ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த ஃப்ளாக்ஷிப் ஐபோன் மாடல் ஆனது ரூ.8,901 என்ற பிளாட் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 13 மாடலை ரூ.60,999 என வாங்கலாம்.

Amazon மற்றும் Flipkart

Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டு ஆன்லைன் விற்பனை தளங்களும் பெரும் தள்ளுபடி தின விற்பனையை ஒரே காலக்கட்டத்தில் நடத்துகின்றன. அதாவது அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையும் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையும் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில் நடக்கிறது. இந்த தினங்களில் ஏணைய முன்னணி ஸ்மார்ட்போன்கள் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்பது நல்லது

இந்த தள்ளுபடி தினங்களில் சமீபத்திய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் மாடல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏணைய நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் இல் ஐபோன் 14 ஆனது ரூ.73,990 என்ற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதேபோல் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.79,900 என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆனால் தற்போதைய விலையை விட இன்னும் குறைந்த விலையில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் ஒரு நாள் மட்டும் காத்திருப்பது நல்லது.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது. எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொங்கலோ பொங்கல்., இது iPhone பொங்கல்: அனைவர் கையிலும் ஐபோன்..

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

சிறந்த பேட்டரி ஆதரவு..

ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 Available at Huge Discount Price in Amazon Great Republic Day Sale and Flipkart Big Saving Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X