Just In
- 19 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 23 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 23 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 1 day ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
எதிரிகள் சிரிக்கிறார்கள்.. ஈகோவை கழற்றி வையுங்கள்.. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அட்வைஸ்
- Automobiles
நடிகர்கள், அரசியல்வாதிகள்னு போட்டி போட்டு வாங்குறாங்க... ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இப்பவே விற்பனை நிறுத்தம்!
- Movies
முதல் 1000 கோடி பிளஸ் இண்டஸ்ட்ரி ஹிட்... விஜய்யின் லியோ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆப்பிள் ஐபோன் 13 வெறும் ரூ.6,200 விலையிலா? நம்ப முடியலைல? உன்னிப்பாக கவனியுங்கள் விஷயம் புரியும்..
நீங்கள் இந்த பதிவின் புகைப்படத்தைப் பார்த்தவுடன், அடடா இது ஐபோன் 13 மாடல் ஆகிற்றே, இந்த புதிய ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் இப்போது வெறும் ரூ. 6,200 விலையில் கிடைக்கிறதா? அப்போ உடனே வாங்கிவிடனும் என்று யோசித்திருப்பீர்கள். இன்னும் சிலர் மிகத் தெளிவாக, இதில் எங்கேயோ இடிக்கிறதே, ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் இந்த விலையில் கிடைக்க வாய்ப்பே இல்லையே என்று சுதாரித்திருப்பீர்கள். சரி, எது எப்படியாக இருந்தாலும் ஆப்பிள் ஐபோனை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நம் அனைவருக்கும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறது.

முதலில் நாங்களும் கூட 'இப்படி' தான் நினைத்தோம்
முதலில், இந்த போன் மாடலின் டிசைனை பார்த்ததும் நாங்களும் கூட, இது ஒரு ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் என்று தான் நினைத்தோம். ஆனால், பின்னர் உன்னிப்பாகக் கவனித்த பிறகு தான் உண்மை விளங்கியது. ஆப்பிள் ஐபோன் 13 போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ஜியோனி நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 13 போலவே சிறிய மாற்றங்களுடன் க்ளோன் செய்து உருவாக்கியுள்ளது. ஐபோன் 13 மினியின் விலையை விட 1/4 -க்கும் குறைவாக விலையில் இப்போது விற்பனை வந்துள்ளது. இந்த புதிய போன் பற்றிய முழு தகவலைப் பார்க்கலாம்.

ஆப்பிள் iPhone 13 வாங்க ஆசை.. ஆனால் பட்ஜெட் கட்டுப்படியாகவில்லையா?
ஆப்பிள் iPhone 13 என்பது இந்த 2022 ஆண்டில் நீங்கள் வாங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய முத்திரை போனாகும். அதன் வடிவமைப்பு முதல் அடிப்படை தொழில்நுட்பம் வரை, எல்லாமே சிறந்த விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தொலைப்பேசியில் தவறுகளைக் கண்டறிவது கடினம். ஆனால் ஆப்பிள் போனை எல்லோராலும் வாங்கிட முடியாது, காரணம் இதன் விலை மிகவும் அதிகமானதாக இருக்கிறது. ஆப்பிளின் நுழைவு நிலை ஐபோன் கூட அதிக விலை கொண்டதாக இருக்கிறது. அதிலும் புதிய வரவான ஐபோன் 13 நமது கண்ணில் கண்ணீர் வரச் செய்யும் வகையில் விலை உயர்ந்ததாக இருக்கிறது.

கம்மி விலையில் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கா?
இருப்பினும், ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களிடம் இருந்தால், அதை நீங்கள் இப்போது ஜியோனி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மூலம் குறைந்த விலையில் தீர்த்துக்கொள்ளலாம். இது ஐபோன் 13 சந்தானத்திற்கு நெருக்கமான தோற்றத்தில் இருக்கிறது என்றாலும் கூட, இதில் ஆப்பிள் பிராண்டிங் மறந்துவிட்டது. ஆனாலும் கூட, இந்த போனின் வடிவமைப்பைப் பார்த்தால் நிச்சயமாக அனைவரும் இதை ஒரு ஐபோன் 13 மாடல் என்று தான் கூறுவார்கள். இது ஐபோன் 13 இல்லை என்று உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே சில முடியும்.

ஐபோனின் குளோனா இந்த Gionee 13 Pro சாதனம்?
Gionee 13 Pro ஆனது நாம் இதுவரை கண்டிராத "ஐபோனி - ஐபோன் குளோன்" ஆக இருக்கிறது. குறைந்த பட்சம் வெளியிடப்பட்ட ரெண்டர்களின் அடிப்படையில் இது ஒற்றுமையாகத் தான் இருக்கிறது. இது குபெர்டினோவின் ஸ்டுடியோவிலிருந்து வெளிவந்த தொலைப்பேசியின் அனைத்து வடிவமைப்பு பண்புகளையும் பெற்றுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஐபோன் 13 கிடைக்க முடியாத விலை புள்ளியை இது கொண்டுள்ளது. இந்த ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் 529 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 6,200 விலை ஆகும்.

iPhone 13 உணர்வைப் பெறுவதற்கான மலிவான வழி இது தானா?
இது iPhone 13 உணர்வைப் பெறுவதற்கான மலிவான வழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் மற்றொரு சிறந்த பகுதி என்னவென்றால், இது நிச்சயமாக ஐபோனின் ஆப்பிள் ஓஎஸ் இல் இயங்கவில்லை. அதேபோல், இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் ஒட்டு ஆண்ட்ராய்டு போன் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்படியானால், இந்த புதிய ஜியோனி 13 ப்ரோ சாதனம் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்று தானே கேட்கிறீர்கள். இதன் முழு சிறப்பம்ச விபரங்களுடன் அதையும் சொல்கிறோம் வாருங்கள்.

ஜியோனி 13 ப்ரோ சிறப்பம்சம்
ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் கேமரா ஹப்பிலிருந்தே iPhone 13 மீதான அதன் ஈர்ப்பையும், அன்பையும் அப்படியே தெளிவாகக் காட்டுகிறது. இது ஐபோன் 13 சாதனத்தில் காணப்படும் அதே கேமரா அமைப்பையும் மற்றும் அதேபோன்ற LED ஃபிளாஷ் பொசிஷனிங்கையும் கொண்டிருக்கிறது. இது தட்டையான பளபளப்பான ரியர் கேஸ்களையும் அப்படியே பிரதிபலிக்கிறது. முன்பக்கத்தில் சிறிய டிஸ்ப்ளே நாட்சையும் ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. நீங்கள் ஐபோன் 13 இல் இருந்ததைப் போலவே, கலர் கிரேடியன்ட்களை பார்க்கும்போது வேறுபாடுகளை உணரத் தொடங்குகிறீர்கள்.

பளிச்சென்று தெரியும் வித்தியாசம் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன?
அடுத்த முக்கியமான வேறுபாடு என்றால், அது ஜியோனி 13 ப்ரோ சாதனத்தில் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பவர் பட்டன் தான். இது பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிகிறது. இத்துடன் ரெண்டர்களின் சீரற்ற பெசல்கள் மற்றும் போனின் பின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜியோனி லோகோ மிகப் பெரிய மாறுபாட்டைக் காண்பிக்கிறது. தோற்றங்கள் ஆப்பிள் ஐபோன் 13 உடன் ஒத்துப்போகிற படி, துரதிர்ஷ்டவசமாக இதன் விவரக்குறிப்புகள் அப்படி ஒத்துப் போகவில்லை என்பதே உண்மை. அடிப்படையில், ஜியோனி 13 ப்ரோ சாதனம், ஆப்பிள் ஐபோன் 13 சிறப்பம்சத்திற்கு அருகில் கூட வரவில்லை.

ஜியோனி 13 ப்ரோ டிஸ்பிளே மற்றும் கேமரா விபரம்
இந்த ஜியோனி 13 ப்ரோ சாதனம் சிறிய நாட்ச் கொண்ட 6.2' இன்ச் டிஸ்பிளே அளவைக் கொண்டுள்ளது. இது 19:9 விகிதத்துடன் HD+ LCD பேனலைப் பயன்படுத்துகிறது. செல்ஃபிகள், வீடியோ அழைப்புகள், ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றிற்காக 5MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் கைரேகை சென்சார் இல்லை. பின்புற கேமராவில் 13MP பிரதான கேமரா சென்சார் உள்ளது. ஆனால் இரண்டாவது கேமரா விவரங்கள் குறித்து ஜியோனி பேசாமல் இருக்கிறது. முழு போனையும் இயக்குவதற்கு Unisoc T310 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு போன் இல்லையா? அப்போ இது என்ன வகை ஸ்மார்ட்போன்?
இந்த சாதனம் ஒரு 3500 mAh பேட்டரி உடன் வருகிறது. இருப்பினும், இந்த iPhone 13 குளோனில் அசல் iPhone 13 இல் இல்லாத ஒன்று இந்த போனில் உள்ளது. அது தான் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட். எந்தவொரு ஐபோன் சாதனத்திலும் பார்க்க முடியாத ஒரே விஷயம் இதுவாகவே தான் இருக்கும். இது ஆண்ட்ராயிடில் இயங்காது என்று முன்பே கூறியது போல, ஜியோனி 13 ப்ரோ சாதனம் Huawei இன் Harmony OS இல் இயங்குகிறது. எனவே, பயன்பாடுகள் மற்றும் சேவைகளை ஹோஸ்ட் செய்ய Huawei மொபைல் சேவைகள் தளத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய உங்களின் கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470