மிரட்டலான தோற்றத்தில் அதிக சக்தியுடன் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி அறிமுகம்..

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் நிகழ்வு இன்று ஆப்பிள் டிவி பிளஸ் அறிமுகத்துடன் துவங்கியது. புதிய டிவி தொடர்களுடன், திரைப்படங்களுடன் ஆப்பிள் டிவி பிளஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக டிம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஐபேட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் சாதனம் 40% மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான தோற்றத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி

இதனைத் தொடர்ந்து அதன் வரிசையில் ஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டது. கை அளவு டிசைனில் 4 புதிய வண்ணங்களில் ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் அம்சங்களை 40 - 80% வரை மேம்படுத்தியுள்ளது. இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு பின்பக்க லென்ஸ் உடன் டச் இடி ஆதரவை ஆதரிக்கிறது. இதன் விலை $499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பெரிய முழு டிஸ்பிளே ஆதரவுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஸ்லிம் வடிவத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர உதவி அம்சத்துடன், புது வாட்ச் பேஸ், முழு கீபோர்ட் போன்ற ஏராளமான புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் மிகுந்த உறுதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 33% வேகமான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் டைப் சி சார்ஜ்ரை ஆதரிக்கிறது. இந்த முறை $399 விலையில் ஆரம்பமாகிறது.

மிரட்டலான தோற்றத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி

இதனைத் தொடர்ந்து புதிய ஐபோன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் அதிநவீன கேமரா அம்சம், அதிக சக்தி, மிரட்டலான செயல்திறன் உடன் பல விதமான புதிய மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 ஸ்லீக் டிஸைனுடன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. ஐபோன் 13 சாதனம் 5 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 13 அதிக வேகத்தில் செயல்படுகிறது.

நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஆப்பிள் ரசிகர்களுக்கான மிக முக்கியமான நாள் இன்று. காரணம், ஒரு வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் சாதனங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் இல் முதலாவதாக ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி ஆகிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடலாகும், இது ஐபோன் 13 சீரிஸ் வரிசையில் இருக்கும் பேசிக் வேரியண்ட் ஐபோன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான தோற்றத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி

இந்த புதிய ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி பற்றிப் பார்க்கையில், ஐபோன் 13 மினியில் 2.5 மணி நேர பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான தோற்றத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி

பேட்டரி ஆயுளை பாதுகாக்க ஸ்மார்ட் டேட்டா மோடு அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் பயனர்களுக்கு பிரைவசி முன்பை விட இன்னும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாக் சார்ஜ்ர் உடன் ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 மினி $699 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் $799 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் 512 ஜிபி கொண்ட உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு மாடல் வரை இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 இரட்டை சிம் வசதி கொண்டது. இரண்டு சிம் கார்டுகளும் ஜிஎஸ்எம் ஆதரவை ஆதரிக்கிறது. இது ஒரு 5ஜி சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நானோ சிம் மற்றும் இசிம் கார்டுகளை ஏற்கும் வசதி கொண்டது. ஐபோன் 13 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac/arm, ஜிபிஎஸ், என்எப்சி, லைட்னிங், 3G, மற்றும் 4G ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 13 And iPhone 13 Mini Launch Details With Price And Specification : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X