Home
News

இது என்ன கணக்கு.,ஒன்னும் புரியலயே- ஐபோன்11 விலைக்கு இணையாக ஐபோன் 12 சீரிஸ் விற்பனை- ரூ.200 மட்டுமே வித்தியாசம்

ஐபோன் 12 சீரிஸ் சாதனம் தற்போது இந்தியாவில் ஐபோன் 11 விலைக்கு இணையாக அறிமுகப்படுத்த உள்ளது. ஐபோன் 12 மினி 64 ஜிபி உள்சேமிப்பகத்துடன் பிளிப்கார்ட்டில் ரூ.50,099-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் அமேசானில் ஐபோன் 11 சாதனம் ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 11 சாதனத்தின் விலைக்கு ஐபோன் 12

ஐபோன் 11 சாதனத்தின் விலைக்கு ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் சாதனம் தற்போது இந்தியாவில் ஐபோன் 11 சாதனத்தின் விலைக்கு சமமாக விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் தற்போது குறிப்பிட்ட விலையில் முந்தைய மாடலான ஐபோன் 11 சாதனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதே விலையில் கூடுதலாக ரூ.200 மட்டும் செலுத்தி ஐபோன் 12 சாதனத்தை வாங்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரண்டு சாதனங்களும் வெவ்வேறு இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஐபோன் 11 சாதனம் அமேசான் தளத்திலும், ஐபோன் 12 சாதனத்தை பிளிப்கார்ட் தளத்திலும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் பெரிய காட்சி சாதனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ஐபோன் 11 சிறந்த தேர்வாகும், அதேபோல் சமீபத்திய ஐபோன் சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் ஐபோன் 12 தொடரின் ஐபோன் 12 மினி சாதனத்தை வாங்கலாம்.

சிறிய வித்தியாசத்துடன் விற்பனை

சிறிய வித்தியாசத்துடன் விற்பனை

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை சிறிய வித்தியாசத்துடன் விற்கப்படுகிறது. ஐபோன் 12 மினி ஃபிளிப்கார்ட்டில் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.50,099 ஆக விற்கப்படுகிறது. அதேபோல் அமேசான் இந்தியாவில் ஐபோன் 11 சாதனம் ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான வித்தியம் ரூ.200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி சலுகையுடன் விற்பனை

அதிரடி சலுகையுடன் விற்பனை

இங்கு, ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனம் அதிரடியான சலுகையுடன் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 மினி இப்போது அதிக தள்ளுபடி உடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ஐபோன் 12 வாங்க விரும்பாதவர்கள் ஐபோன் 12 மினி சாதனத்தைக் கூட இப்போது வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தின் 64ஜிபி மாறுபாடு இப்போது ரூ. 50,099 விலைக்குக் கிடைக்கிறது. அதே சமயம், 128ஜிபி மாறுபாடு மாடல் ரூ.55,099 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல், இதன் 256ஜிபி மெமரி வேரியன்ட் மாடல் ரூ.65,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும். ஐபோன் 12 சாதனமானது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.இரண்டு ஸ்மார்ட்போன்களும் டால்பி ஆதரவோடுவருகிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் அம்சத்துடன் இயக்கப்படுகின்றன.

2851 எம்ஏஎச் பேட்டரி

2851 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 12 சாதனத்தில் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் கேமரா அமைப்பில் 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் செல்பி, வீடியோ அழைப்புகளுக்கு4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Iphone 12 Series Now Available at Iphone 11 Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X