ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. ரூ. 12,901 வரை விலை குறைப்பு.. உடனே முந்துங்கள்..

|

ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் உள்ள மாடல்களின் மீது நம்ப முடியாத பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வை நடத்தத் தயாராக உள்ளது. இந்நிகழ்வில் அதன் சமீபத்திய ஐபோன் 13 வரிசை மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 இன் வருகைக்கு முன்பு ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் விலை குறைந்ததா?

ஆப்பிள் ஐபோன் 13 இன் வருகைக்கு முன்பு ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் விலை குறைந்ததா?

ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அதன் தளத்தில் குறிப்பிட்ட ஆப்பிள் விற்பனையை எதையும் அதன் மேடையில் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களுக்கு பெரிய தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. ஐபோன் 12 பிளிப்கார்ட்டில் ரூ. 66,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. இந்த சாதனம் முதலில் ரூ. 79,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையான விலை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ தளத்தில் அதே விலைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐபோன் 12 சாதனத்தின் மீது ரூ. 12,901 விலை தள்ளுபடியா?

ஐபோன் 12 சாதனத்தின் மீது ரூ. 12,901 விலை தள்ளுபடியா?

இதன் பொருள் ஃபிளிப்கார்ட் ஐபோன் 12 சாதனத்தின் மீது ரூ. 12,901 விலையைத் தள்ளுபடி செய்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த விலை ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி சேமிப்பு மாடலுக்கானது. ஐபோன் 12 இன் 128 ஜிபி மாடலும் ரூ. 84,900 விலையில் இருந்து குறைந்து ரூ. 71,999 விலையில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இத்துடன் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. எனவே ஆர்வமுள்ள பயனர்கள் சாதனத்தை மிக குறைந்த விலையில் வாங்க முடியும்.

வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்: வழக்கறிஞர் கவுன் பாக்கெட்டில் இருந்துருக்கு- நடந்தது என்ன?வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்: வழக்கறிஞர் கவுன் பாக்கெட்டில் இருந்துருக்கு- நடந்தது என்ன?

ஆப்பிள் ஐபோன் 12 உயர்நிலை மாடல் மீது எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது?

ஆப்பிள் ஐபோன் 12 உயர்நிலை மாடல் மீது எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது?

ஐபோன் 12 இன் உயர்நிலை மாடலான 256 ஜிபி வேரியன்ட் ரூ. 94,900 விலையில் இருந்து ரூ. 81,999 என்ற விலைக்கு இப்போது கிடைக்கிறது. ஐபோன் 12 மினி சாதனத்தைப் பயனர்கள் ரூ. 59,999 விலைக்கு வாங்கலாம். இது முதலில் ரூ. 69,900 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது Flipkart இப்போது ரூ. 9,901 தள்ளுபடி அளிக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள எக்ஸ்சேஞ் சலுகை இந்த தொலைப்பேசியின் மீதும் செல்லுபடியாகும். ஐபோன் 12 மினி சிறிய 5.4 இன்ச் OLED சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஐபோன் 12 ப்ரோவை வாங்க விரும்பும் பயனர்களுக்கு சலுகை உள்ளது

ஐபோன் 12 ப்ரோவை வாங்க விரும்பும் பயனர்களுக்கு சலுகை உள்ளது

இது 4K வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இது A14 பயோனிக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது நான்காவது தலைமுறை இயந்திரம் மற்றும் புதிய நான்கு கோர் கிராபிக்ஸ் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோவை வாங்க விரும்புவோர் ரூ. 1,15,900 விலைக்கு வாங்கலாம். முதன்மை ஸ்மார்ட்போன் முன்பு ரூ. 1,19,900 விலைக்குக் கிடைத்தது. குறிப்பிடப்பட்ட விலைக்கு, பிளிப்கார்ட் 128 ஜிபி மாடலை விற்பனை செய்கிறது. உங்கள் பழைய சாதனத்தின் பரிமாற்றத்தில் ரூ. 15,000 வரை கூடுதல் தள்ளுபடியையும் Flipkart வழங்குகிறது.

உங்கள் வாட்ஸ்அப் தகவலை யாரும் திருடாமல் இருக்க இதான் பெஸ்ட் அம்சம்.. முக்கிய விஷயங்கள் கவனிக்க மறக்காதீர்கள்..உங்கள் வாட்ஸ்அப் தகவலை யாரும் திருடாமல் இருக்க இதான் பெஸ்ட் அம்சம்.. முக்கிய விஷயங்கள் கவனிக்க மறக்காதீர்கள்..

ஆப்பிள் ஐபோன் 13 வருகைக்கு முன்பே ஆப்பிள் ஐபோன் 14 பற்றி வெளியான தகவல்

ஆப்பிள் ஐபோன் 13 வருகைக்கு முன்பே ஆப்பிள் ஐபோன் 14 பற்றி வெளியான தகவல்

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அதன் புதிய ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் அறிமுகம் செய்கிறது. இத்துடன், கூடுதலாக நிறுவனம் வேறு சில சாதனங்களையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனம் என்ன மேம்பாடுகளுடன் வரும் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் அதன் ஆப்பிள் ஐபோன் 14 சாதனத்தை அறிமுகம் செய்யுமென்ற புது தகவலும் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple iPhone 12 Series Gets A Massive Discount On Flipkart Ahead Of iPhone 13 Launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X