தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் 'மேக் இந்த இந்தியா' ஆப்பிள் ஐபோன் 12.. எங்கே தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 12 சாதனத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆலையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பெரிய ஊக்கமளிக்கும் நிகழ்வாக பார்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' திட்டம் நிரூபிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 12 சாதனங்கள் எங்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

மேக் இன் இந்தியா தயாரிப்பாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12

மேக் இன் இந்தியா தயாரிப்பாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் நிறுவனத்தின் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கானால் இந்த மாடல் ஸ்ரீபெரம்புதூரில் சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மூலப்பொருட்களைக் கொண்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு மேக் இன் இந்தியா தயாரிப்பாக உருவெடுத்துள்ளது. மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியச் சந்தையில் நுழைவதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளுக்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய முதலீட்டாளர்களின் கண்களின் தமிழகம்

முதலீட்டு மேம்பாட்டிற்கான மாநில அரசின் நோடல் ஏஜென்சியான கைடன்ஸ் தமிழ்நாடு, 2020 அக்டோபரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோனின் வெற்றிகரமான அசெம்பிள் செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. "முதலீட்டாளர்களின் கண்களின் தமிழகம், ஆப்பிள்! # iPhone12 இப்போது தயாரிக்கப்பட்ட உள்ளது தமிழ்நாட்டில், என்று டிவிட்டர் பக்கத்தி உள்ள ஒரு ட்வீட் இல் வெளியிடப்பட்டது. ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்குத் தமிழகம் கவர்ச்சிகரமான மாநிலமாக மாறுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..

மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம்

மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம்

தமிழகத்தில் தற்பொழுது அசெம்பிள் செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 12 சாதனங்கள் நன்கு பயிற்சி பெற்ற மனிதவளமும் நல்ல தொழில்துறை உறவுகளும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு முக்கிய விஷயங்களும் ஆப்பிள் ஐபோனின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மாநில அரசு அதிகாரி கூறியுள்ளார். "இந்தியாவில் மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியைப் பொறுத்தவரைத் தமிழகம் இரண்டாவது பெரியது மாநிலமாக உள்ளது.

தமிழ்நாடு செயல்பாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாடு செயல்பாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இதற்கு முன்பு சில முக்கிய நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களின் பணியைத் தொடர்ந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் தமிழகத்திற்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு என்றும், டிஹாற்கு முன்பு நோக்கியா போன்ற நிறுவனங்கள் இங்கிருந்து செயல்பட்டது என்பதனையும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டிக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இந்த இடம் (தமிழ்நாடு) செயல்பாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி

தமிழகம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி "எளிதானது"

"ஃபாக்ஸ்கானுக்குப் பிறகு, பெகாட்ரான் தமிழ்நாட்டிலும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களில் (ஆப்பிள்), இரண்டு இங்கே உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இரண்டு துறைமுகங்கள் மற்றும் ஒரு விமான நிலையம் இருப்பதால் தமிழகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி "எளிதானது" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். மேலும், இன்னும் சில ஆண்டுகளில் அதிகப்படியான பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தனது நிறுவனங்களைச் செயல்படுத்த முன்வரும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Apple iPhone 12 now made in Sriperumbudur Tamil Nadu : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X